விருதுநகர் விவசாயிகள்

விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?

ஏற்கனவே பருவத்தில் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பெய்ததால், முதலில் விதைத்த பயிர்கள் சரியாக வளராது போயிருக்கின்றன. இதன் காரணமாக அவற்றை அழித்துவிட்டு மீண்டும் இரண்டாம் விதைப்பினை விவசாயிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இரண்டாம் விதைப்பில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், பெருமழை பெய்ததால் அந்த பயிர்களும் 100 சதவீதம் சேதமடைந்திருக்கின்றன. இதன் காரணமாக இரண்டு முறை விதைப்பும் வீணாகிப் போயுள்ளதால் 100 சதவீத சேதத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு இரட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பார்க்க விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்

வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?