ஆன்லைன் கல்வி என்பது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருகிறது என்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வினை நடத்தியுள்ளனர். ஆன்லைன் கல்வி பெரிதாக பயனைத் தரவில்லை என்றும், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக விளிம்புநிலை மாணவர்கள் பயிலும் 1522 பள்ளிகளைச் சேர்ந்த 1522 ஆசிரியர்களிடம் கருத்தெடுப்புகளை மேற்கொண்டனர். மேலும் 5 மாநிலங்களைச் சேர்ந்த 398 ஆசிரியர்கள் இந்த அய்வில் கலந்து கொண்டனர்.
- 80%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைன் கல்வி மாணவர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
- மாணவர்களை மதிப்பிடுவது ஆன்லைனில் சாத்தியமில்லை என்று 90%-க்கும் அதிகமானோர் கூறியுள்ளனர்.
- ஆன்லைனில் குழந்தைகள் தங்கள் வீட்டுப்பாடங்களை சரிவர முடிக்க முடியாத காரணங்களினால் எல்லா குழந்தைகளும் சமமான வேகத்தில் கற்பதில்லை என்று 50% ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
- இதேபோல், 70% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றலுக்கு ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
- தவறாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள 60% மாணவர்களால் முடியவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- 20% பெற்றோர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கின்றனர். பெரும்பாலானோர் தினசரி தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் காலையில் வேலைக்கு சென்று மாலை தாமதமாகவே வீடு திரும்புவதால் குழந்தைகளால் இந்த வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மொத்தத்தில் 54% ஆசிரியர்கள் ஆன்லைன் கல்வி என்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நிறைவாக இல்லை என்று கூறியுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான போதுமான ஏற்பாடுகளுடன் பொதுப்பள்ளி முறையில் பயில்வதற்காக பள்ளிகளை ஒழுங்கு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.