தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63,41,639 என்று தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
18 வயதிற்கு உட்பட்டவர்கள் – 18,15,432
19 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் – 11,28,412
24 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் – 22,83,209.
36 வயது முதல் 57 வயது வரை உள்ளவர்கள் – 11,05,761
58 வயதிற்கு மேற்பட்டவர்கள் – 8,825
படிப்பு வரியாக
டிப்ளமோ (பொறியியல்) – 2,29,873
டிப்ளமோ (மற்றவை) – 85,711
இரண்டாம் நிலை ஆசிரியர்கள் – 1,65,447
இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர்கள்
இளங்கலை கலை பட்டம் – 3,70,155
இளங்கலை அறிவியல் பட்டம் – 4,98,710
வணிகவியல் பட்டம் – 2,63,298
ஆசிரியர் பட்டம் – 2,98,915
பொறியியல் – 2,06,807
மருத்துவம் – 1413
விவசாயம் பட்டப்படிப்பு – 6060
விவசாயப் பொறியியல் – 260
கால்நடை மருத்துவம் – 1316
சட்டம் – 1834
இதர பட்டப்படிப்புகள் – 1,01,473
முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள்
கலை பட்டம் – 1,02,631
அறிவியல் பட்டம் – 1,17,489
வணிகவியல் – 32,484
முதுகலை ஆசிரியர் படிப்பு – 2,21,337
பொறியியல் – 2,02,804
மருத்துவம் – 686
விவசாயம் – 457
விவசாயப் பொறியியல் – 12
கால்நடை மருத்துவம் – 173
சட்டம் – 166
இதர முதுகலை படிப்புகள் – 1,83,708
மாற்றுத்திறனாளிகள்
இதில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1,33,252 ஆக இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை கை, கால் குறைபாடுடையோர் 1,03,268 பேரும், விழிப் புலனிழந்தோர் 16,192 பெரும், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 13,792 பேரும் உள்ளனர்.
இவர்களில் ஆண்கள் 87,757 பேர். பெண்கள் 45,495 பேர்.