பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்கினை பதிவிட்டு வருகிறார்கள்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழ்வரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதித்த நிலையில், தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆளுநருக்கு கோரிக்கை வைத்து சமூக வலைதளப் பக்கங்களில் எழுதி வருகிறார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி
பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்து நடிகர் விஜய் சேதுபதி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு.
“நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்… சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.”
இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித் பேரறிவாளன் விடுதலைக்கான ஒரு Rap பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு நிரபராதியின் 30 ஆண்டுகால சிறைவாசம்
ஒரு தாயின் கால் நூற்றாண்டு போராட்டம்
நீதிக்காக பாடல் வழியே இளைஞர்களின் குரல்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.
”இந்த விசாரணையின் ஒரு பகுதியாய் இருந்த அதிகாரிகள் முதல் மக்கள் வரை அனைவரும் தங்கள் கவலையையும், பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளனர். மக்களின் கூட்டுக் குரல் என்பது மதிக்கப்பட வேண்டும். 30 வருடங்களுக்குப் பிறகு அவரை வெளிச்சத்தைப் பார்க்க விடுங்கள்”
மேலும் பேரறிவாளனுக்கு நீதி வேண்டும் என்று தனது காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விசாரணை அதிகாரி தியாகராஜன் பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை தான் முழுமையாக பதிவு செய்யாததை ஒப்புக் கொண்ட காணொளியை பகிர்ந்து பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
”தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது.”
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
”ஒரு மனிதர் செய்யாத தவறுக்காக 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். 30 ஆண்டுகளாக ஒரு தாய் தனது மகனை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார். மரியாதைக்குரிய முதல்வர் மற்றும் ஆளுநர் அவர்களே, அவர்களுக்கு நீதியைத் தாருங்கள். இப்போதிலிருந்தாவது அந்த தாயையும், மகனையும் சுதந்திர வாழ்க்கையை வாழ விடுங்கள்”
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
”போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் ..
குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்…! என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்!”
இயக்குநர் மிஷ்கின்
”பேரறிவாளனின் விடுதலைக்காக போராடினோம். நடக்கவில்லை என்றால் மண்டியிட்டும் கேட்போம். அதில் தவறில்லை. அவரை விடுவியுங்கள் என மண்டியிட்டுக் கேட்கிறேன்.”
இயக்குநர் பாரதிராஜா
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“நிரபராதியான சகோதரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல.” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள காணொளி
நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி வெளியிட்டுள்ள காணொளி
இயக்குநர் ராஜூ முருகன்
”உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தாமதம் எதற்கு..? முதல்வரே… ஆளுநரே… அற்புதம் அம்மாளின் 30 வருட கண்ணீரை துடைத்து, பேரறிவாளன் என்ற, உடல் நலிவுற்றுக்கொண்டிருக்கும் நிரபராதி மகனுக்கான நீதியை… விடுதலையை உடனே சாத்தியப்படுத்துங்கள்!”
நடிகர் பார்த்திபன்
நடிகரும், இயக்குநருமான இரா.பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது.
”அற்புதம் அம்மாள் நீதித்துறையின்
பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும்
அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ
வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.”
இயக்குநர் நவீன்
வாக்குமூலம் பதிவி செய்த காவல்துறை அதிகாரி பேரறிவாளன் நிரபராதி என்று சட்டபூர்வமாக affidavit கொடுத்துவிட்டார். #SupremeCourt, ராஜிவ் குடும்பம், தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். தடையாக இருப்பது ஆளுநரின் கையெழுத்து மட்டுமே.
இயக்குநர் சிம்புதேவன்
”அந்த தாயின் துயருக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
முப்பது வருட போராட்டம்
முடிவுக்கு வரட்டும்!”