பாஜகவின் பாலியல் வழக்கு பட்டியல்
சமீபத்தில் பாஜக வில் சேர்ந்த ‘யூடியூபர்’ மதன் ரவிச்சந்திரன் என்பவர் அதே கட்சியை சேர்ந்த பாஜகவின் முக்கிய தலைவரும் மாநில பொதுச் செயலாளருமான கே டி ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய பாலியல் விடியோவை அவரது யூட்டுப் தளத்தில் வெளியிட்டார். அந்த செய்தி அடங்கும் முன்னரே அதே சம்பவம் தொடர்பாக பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை குறித்தும் ஒரு ஆடியோ தொகுப்பை மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். சமூக வலைதளங்கள், செய்திகள் என எல்லா இடங்களிலும் இவை குறித்த விடியோவும் செய்திகளும் பரவலாக பேசுபொருளாக இருந்துகொண்டிருக்கிறது மேலும் இது இன்னும் ஓய்ந்த பாடில்லை.
பாஜகவில் பாலியல் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை என்ற வகையில் ஏதாவது ஒரு வகையில் பாலியல் சர்ச்சைகளும் பாலியல் வழக்குகளும் பாலியல் குற்றங்களும் பாஜகவை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாஜகவிற்கு இது புதிதல்ல என்றே சொல்லலாம். கே டி ராகவன் மட்டுமல்ல தேசிய அளவில் பல்வேறு பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குற்றம் சாட்டப்பட்டும் தண்டனைக்குள்ளாகியும் உள்ளனர்.
தேசிய அளவில் பாலியல் சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்கள் விவரம்:
1997 கோபிநாத் முண்டேவின் பாலியல் சர்ச்சை
1997 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் அப்போதைய துணை முதல்வராக இருந்த கோபிநாத் முண்டேவின் தமாஷா நடனக் கலைஞர் பர்கா பாட்டீலுடனான அவரது விவகாரம் வெளிப்படையாக வெளிவந்த பிறகு, அவர் மீதான பொதுவெளி முகம் உடைந்தது. முண்டே இந்த குற்றச்சாட்டை தனக்கு வேண்டாதவர்கள் அவர்களுடைய அரசியல் லாபத்திற்காக இந்த அவதூறை பரப்புகிறார்கள் என்று அந்த குற்றச்சாட்டை மறுத்தார். இருந்தபோதும் குற்றச்சாட்டை வைத்தவர்கள் மீதோ குற்றச்சாட்டை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கை மீதோ அவதூறு வழக்கு ஏதும் போடவில்லை. அவர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சராவர்.
2003 – ஹரக் சிங் ராவத்விர்க்கு பிறந்த குழந்தை
அப்போதைய உத்தர்காண்ட் வருவாய்த்துறை அமைச்சர் 2003 இல் இந்திரா தியோரி ஜெஸ்மி என்ற அஸ்ஸாமியப் பெண்ணால் ஹரக் சிங் ராவத் தான் தனது பிறந்த குழந்தையின் தந்தை என்று கூறினார்.
2005 – சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொளி
2001 – 2005 காலகட்டத்தில் அவர் தேசிய பொது செயலாளராக சஞ்சய் ஜோஷி இருந்தபோது ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக ஆபாசக் காணொளி வெளியானது. பாஜகவின் வெள்ளிவிழா ஆண்டு நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் அப்போது அனைவராலும் இந்த குற்றச்சாட்டு கவனம் செலுத்தப்பட்டது. இவர் இதற்கு முன்பு RSSல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு 5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பிரமோத் குப்தா
முன்னாள் பா.ஜனதா தலைவரும் கூட்டுறவு வங்கி தலைவருமான குப்தா 5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
2009 – மகளுக்கே பாலியல் தொல்லைகொடுத்தஅசோக் தனேஜா
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அசோக் தனேஜா எட்டு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது மகள் குற்றம் சாட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
2009ம் ஆண்டு சொகுசு விடுதியில் வபச்சாரத்தில் ஈடுபட்ட ராஜிந்தர் ராணா
இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா சொகுசு விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டார். எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு 2009 ம் ஆண்டு தான் வகித்து வந்த ஊடக அறிவுரைக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்
2010 – நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்த ஹாலப்பா
கர்நாடகாவின் முன்னாள் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் எச்.ஹாலப்பா தனது நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2013 – வீட்டு உதவியாளரை பாலியல் வன்புணர்வு செய்ததாக ராகவ்ஜி லக்மாசி சவ்லா
2013 ஆம் ஆண்டில், அப்போதைய மத்தியப் பிரதேசத்தின் நிதியமைச்சராக இருந்த ராகவ்ஜி லகாம்சி சவாலா, ஆண் வீட்டு உதவியாளரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பாதிக்கப்பட்டவர் தனது அறிக்கையில், அமைச்சர் அந்த நபருக்கு நிரந்தர அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரை சமாதானப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் ராகவ்ஜிக்கு 79 வயது. குற்றச்சாட்டு தொடர்பான CD ஆதாரம் வெளிவந்த உடன் ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இவர் பாராளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர். இதுமட்டுமின்றி நிதியமைச்சராகவும் பணியாற்றி இருந்தார்.
2013 – பெண் சட்டமன்ற உறிப்பினருடன் மது சாவன் கொண்ட ரகசிய உறவு
மஹாராஷ்டிரா மாநில பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த மது சாவன் முன்னாள் பெண் சட்டமன்ற உறிப்பினர் ஒருவருடன் 20 வருடமாக உறவில் இருந்ததும் அவரை கல்யாணம் செய்த கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டார்.
2013 – நவம்பர் – 23 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நீவராஜ்
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் 23 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிருங்கேரியை சேர்ந்த பாஜக தலைவர் டி என் ஜீவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2013 பிலாஸ்பூர் பெண் கொலையில் சம்மந்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி.
பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் கிருஷ்ணமூர்த்தி பந்தி மீது கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த புகார் சமர்பிக்கப்பட்ட பின்னாளில்குற்றம்சாட்டிய பெண் மர்மமான முறையில் எரித்து கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 2013 – ஆயுள் தண்டனை விதித்தது பிரமோத் குப்தா
முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவரும் முன்னாள் பாஜக தலைவருமான பிரமோத் குப்தாவுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் ஐந்து ஆண்டுகள் கழித்து உள்ளூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
ஆகஸ்ட் 2014 – மைனர் பெண் கடத்தல் வழக்கில் கைதான ஹமீத் சர்தார்
ஆகஸ்ட் 2014 இல் பாஜக தலைவர் ஹமீத் சர்தார் மற்றும் 5 பேர் சேர்ந்து மைனர் பெண் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 2014 – மோடியின் அமைச்சர் நிஹல் சந்த் மீதாக பாலியல் குற்றம்
ராஜஸ்தான் எம்.பி.யும், மோடியின் அமைச்சரவையில் அமைச்சருமான நிஹல் சந்த் ஜூன் 2014ம் ஆண்டு 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஆகஸ்ட் 2014 – அஸ்ஸாம் சிறுமியை கடத்தி ஹமீத் சர்தார்
மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஹமீத் சர்தார் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் அசாமில் இருந்து ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
மயக்க மருந்து கொடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட சாந்திபாய் சோலங்கி
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நலியா நகர பாஜக தலைவர் சாந்திபாய் சோலங்கி, 2015 ஆகஸ்ட் மாதம் தன்னிடம் வேலை பார்த்த 25 வயது பெண்ணை திருமணம் ஆனவர் என்றும் பாராமல் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவு செய்ததோடு அதை வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்களுடனும் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். பல முறை கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளான அந்தப் பெண் மூன்று முறை தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார். இறுதியில் 2015, ஜனவரி 25ம் தேதி அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பாஜக பிரமுகர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 2015 – போதை பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த உமேஷ் அகர்வால்
குர்கானைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் உமேஷ் அகர்வால் ஃபரிதாபாத் என்னும் இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் 30 வயது பெண்ணை போதை பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.
அக்டோபர் 2016 – பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மீதான பாலியல் வெங்கடேஷ் மயூரியா
அக்டோபர் 2016ல் வெங்கடேஷ் மயூரியா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் அவர் தன்னை முக்கிய பாஜக தலைவர் எனவும் பாஜக வின் தேசிய பட்டியல் சாதி அணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எனவும் அறிமுகம் செய்து கொண்டு அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
டிசம்பர் – 2016 பழங்குடியினப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பாஜகவினர்
மத்தியப் பிரதேசத்தின் பைத்துல் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர், பா.ஜனதா தலைவர் மற்றும் அவரது ஐந்து கூட்டாளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது
நவம்பர் 2016 – விமானத்தின் சிறுமியை பாலியல் தொல்லை செய்த அசோக் மக்வானா
குஜராத்தில் உள்ளூர் பாஜக தலைவரான காந்திநகரைச் சேர்ந்த அசோக் மக்வானா கோவா-அகமதாபாத் இண்டிகோ விமானத்தின் 13 வயது சிறுமியை பாலியல் தெல்லை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 2017 – மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஜெயேஷ் பட்டேல்
குஜராத் பாஜக தலைவரும், வதோதராவில் உள்ள தனியாருக்கு சொந்தமான பருல் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் தலைவருமான ஜெயேஷ் பட்டேல் (66) அதே பல்கலைக்கழகத்தின் 22 வயது நர்சிங் மாணவியை பாலியல் பலாத்கார குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டார்.
பாஜகவினரால் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குஜராத் பெண்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நான்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் உட்பட 10 பேர் 24 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். குற்றத்தில் உட்பட்ட நான்கு தலைவர்கள் சாந்திலால் சோலங்கி, கோவிந்த் பரமலானி, அஜித் ராம்வாணி மற்றும் வசந்த் பானுஷாலி.
பிப்ரவரி 2017 – விடுதியில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ராமகந்த தேவ்ரி
இவர் அசாம் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர். 18, பிப்ரவரி 2017 விடுதி ஒன்றில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காட்சி அன்றைய தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மேல் இதற்கு முன்னர் 34 வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. இதற்காக கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
17 ஜூன் 2017 சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குல்தீப் சிங் செங்கர்
ஜூன் 2017 ம் ஆண்டு 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டபோது இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மே 2017 – விபச்சார தொழில் செய்தத நீரஜ் சாக்கியா
மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலித் அணியின் செய்தித் தொடர்பாளரான இவர் விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனால் இவர் கைதும் செய்யப்பட்டார்.
2017 ஏழைப்பெண்ணை கூட்டு பலத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான போஜ்பால் சிங்
மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் போஜ்பால் சிங் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள் பிபிஎல் கார்டு தருவதாக வாக்குறுதி அளித்து தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக மார்ச் 2017 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 2017 பெண்னை குடிபோதைக்கு ஆட்படுத்தி பாலியல் செய்த விஜய் ஜாலி
டெல்லி பிஜேபி முன்னாள் எம்எல்ஏ விஜய் ஜாலி 2017 பிப்ரவரியில் தன்னை குடிபோதையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டினார்.
ஜனவரி 2017 – காசிமிரா அனில் போசலேமீதான குற்றச்சாட்டு
காசிமிரா அனில் போசலே 44 வயது பெண்ணை ஜனவரி 2017 அன்று பாலியல் வன்புணர்வு செய்து குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.
ஜூலை 2017 – பேருந்து பயனத்தில் பெண்ணை பாலியல் சீண்டல்செய்த ரவீந்தர பவந்தாதே
மகாராஷ்டிராவில் பேருந்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்டச் செயலாளர் ரவீந்தர பவந்தாதே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதை விடியோவாக பிடித்து அது காணொளியாக வெளியானதை அடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வுப் புகார் அளித்தார். மேலும் அவர் வேலை வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, தன்னை ஏமாற்றி விட்டார் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜூலை 4, 2017ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என பாஜக மறுத்தது.
2016. பாலியல் இன்பத்திற்காக ராணுவ ரகசியத்தை கசியவிட்ட வருண்காந்தி
வெளிநாட்டுப் பாலியல் தொழிலாளிகளுடன் விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டு, அந்தப் புகைப்படங்கள் வெளிவராமல் இருப்பதற்காக இந்திய இராணுவ ரகசியங்களைக் கசிய விட்டதாக 2016ம் ஆண்டு பாஜக இளம் தலைவர் வருண் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது
சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஜெயதேவ்
திருவனந்தபுரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜெயதேவ் என்பவர் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஆகஸ்ட் 17, 2017ல் கைது செய்யப்பட்டான்.
சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு விற்ற ஜூஹி சவுத்ரி
மேற்கு வங்காள பாஜக மகளிர் அணித் தலைவர் ஜூஹி சவுத்ரி, 17க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலுக்கு விற்றதாக பிப்ரவரி 27 2017 அன்று கைது செய்யப்பட்டார்
2017ம் ஆண்டு 17 வயது இளம் பெண்ணை கற்பழித்த குல்தீப் சிங்கும்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னா மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை 2017 ஜூன் மாதம் பாலியல் வன்புணர்வு செய்தனர். அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து 2018 ஏப்ரல் 3ம் தேதி கொலை செய்தனர். குல்தீப் சிங்கின் சாதி செல்வாக்கிற்கு அஞ்சி, மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், ஏப்ரல் 14, 2018ல் மத்திய புலனாய்வுப் பிரிவு போலிசார் குல்தீப் சிங்கை கைது செய்தனர்.
2018 ஜனவரி எட்டு வயது சிறுமி ஆசிஃபா–வை கற்பலித்து கொன்ற இந்துத்துவ அமைப்பினர்
கொடூரத்திலும் கொடூரமாக காஷ்மீர் மாநிலத்தில் குதிரை மேய்த்துக் கொண்டிருந்த 8 வயது சிறுமி ஆசிஃபா-வை 8 பேர் கொண்ட இந்துத்துவ கும்பல் கடத்தி, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இவர்கள் புனிதம் புனிதம் என்று பேசிய கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். குற்றசாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்.யைச் சார்ந்த ‘இந்து ஏக்தா மஞ்சு’ என்ற அமைப்பு போராட்டமும் நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் லால்சிங் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சந்தர் பர்கஷ் கங்கா போன்றோரும் பங்கெடுத்திருக்கின்றார்கள். பிரச்சனை பொது வெளியில் வந்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியத்தை எடுத்து 8 பேரையும் காவல் துறை கைது செய்தது.
22 ஏப்ரல் 2018 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த கோஷ்
திரிபுரா மாநிலத்தில் ‘அகில பாரத அகண்ட விகாஸ் பரிஷத்’ என்ற இந்துத்துவ அமைப்பின் தலைவர் கோஷ் (58 வயது), 14 வயது சிறுமியை பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக,பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் POSCO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்த பிரேம் ஆனந்த்
ஏப்ரல் 22, 2018ம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற தொடர்வண்டியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் POSCO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் 2006ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த ராம் ரத்தோர்
2021 ஜனவரி மாதம் உத்தரபிரதேச பாஜக அமைப்பு பொருப்பாளர் ராம் ரத்தோர் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். இவர் மீது கடந்த ஆறு ஆண்டுகளாகவே பல்வேறு குற்றம் சார்ந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 65வயதான இவர் மீது இதுவரை 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஏற்கவே 2014ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையை பாலியில் ரீதியாக துன்புறுத்தியதாக இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 13ம் தேதி இரு பெண் குழந்தைகள் இவர் மீது கொடுத்த பாலியல் வழக்கின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த பத்மராஙஜ்ன்
2021ம் ஆண்டு ஜுலை 7ம் தேதி கேரளா மாநிலத்தில் தலசேரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் பாஜக தலைவர் பத்மராஜன் மீது குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்மராஜன் 4 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று வழக்கு பதியப்பட்டுள்ளது.
தாய் மற்றும் மகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த பார்த்தசாரதி கைது
ஜுலை 16 2021 அன்று சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. 55 வயதாகிறது. இவர் பாஜகவில் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். தாய், மகள் என 2 பேருக்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சர் தந்த புகாரின் பேரில் பாஜக பிரமுகர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2021 ஜுலை 11 தேதி குத்தாலம் பகுதியில் இருக்கும் கோழிகொத்தி கிரமத்தை சார்ந்த பாஜக தெற்கு ஒன்றிய பொதுசெயலார் மகாலிங்கம் அங்கு வசிக்கும் 6 சிறுமிகளுக்கு ஆபாசப்படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
2021 மார்ச் மாதம் கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
பாஜக உறுப்பினர்களின் சட்டப்பேரவை அட்டூழியங்கள் :
2012 பிப்ரவரி 7ம் தேதி கர்நாடக சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜகவினர்
கர்நாடக சட்டப் பேரவையில் பாஜக அமைச்சர்கள் லக்ஷ்மண் சாவடி, சி.சி.படீல் மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணா பாலேமர் ஆகியோர் சட்டப்பேரவை நடக்கும்போதே சட்டப்பேரவை என்றும் கூட பாராமல் ஆபாச படம் பார்த்தனர். அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்து தொலைக்காட்சியில் ஒலிபரப்பியத்தை எடுத்து சர்சைக்குள்ளாகி கடும் கண்டனத்தை ஒட்டி மூவரும் பதவி விலகினார்கள்.
மார்ச் 20 2012 குஜராத் சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜகவினர்
அதே ஆண்டில் மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்கர் சவுத்ரி, ஜீத்தாபாய் பர்வத் இருவரும் சட்டபேரவையில் ஆபாசப் படம் பார்த்தனர். அதையும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் படம்பிடித்து தொலைக்காட்சியில் ஒலிபரப்பினர்கள். இதனால் அச்சம்பம் பெரும் சர்சைக்குள்ளாகியது.
தமிழ்நாடு
பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து 2017, ஜனவரி 27ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் வேறு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் நேர்ந்தது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த தற்கொலையை முஸ்லிம்கள் செய்த கொலையாக சித்தரித்து, பாஜக கலவரம் ஏற்படுத்த முயன்றது.
பாஜக ஆதரவு அமைப்பான இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கினார். நந்தினி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன நந்தினியைக் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, கொடூரமாகக் கொலை செய்து பாழுங் கிணற்றில் வீசினர். ஜனவரி 14, 2017ம் தேதி மணிகண்டனும், அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
பாஜக-வால் நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேகாலயா ஆளுனரான சண்முகநாதன் நேர்முகத் தேர்விற்காக வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக டிசம்பர் 7, 2016ம் தேதி குற்றசட்டப்பட்டது அதனையடுத்து அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது.RSS மூத்த தலைவராகவும் இவர் பதவி வகித்தார் . இறுதியில் அவர் பதவி விலகினார்.
இதேபோன்று பாஜக வால் நியமிக்கப்பட்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் ப்ரோஹித் மீதும் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்தியதாகவும் அதற்கு பேராசிரியர் நிர்மலதேவி மாணவிகளை வற்புறுத்தியதாக பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் வழக்கை விசாரிக்க கவர்னர் தலைமையிலே தனி நபர் கமிஷன் ஒன்றை அவரே வைத்தார். இன்று வரை அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.
இந்த பட்டியல் முடிவில்லாத ஒன்றாக நீண்டுகொண்டே உள்ளது. எதிர்காலத்தில் இது முற்றுப்புள்ளிக்கு உள்ளாகுமா என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது பாஜகவின் செயல்பாடுகள். ராகவன் வீடியோ வந்தவுடன் அது குறித்துமட்டுமே பரபரப்பான செய்திகளையும் மறுப்புகளையும் வெளியிட்டுவிட்டடு பாஜக தலைமை ஒதுங்கிவிட்டது இங்கு அடிப்படையாக எழும் கேள்வி பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு உண்டா என்பது தான், அடிப்படையில் பொதுவாழ்விற்கு தன்னை அர்ப்பணிக்க முன்வரும் பெண்களை இந்துத்துவா சக்திகள் என்னவாக பார்க்கிறது? இதுகுறித்தான அவர்களின் சித்தாந்தம் என்ன ?என்ற பல கேள்விகள் எழுகின்றன. ஒரு பொது மேடையில் ஆர்எஸ்எஸ் தலைவர் பெண்கள் வீட்டு வேலைமட்டும் செய்தால் போதும் வேலைக்கு போக கூடாது என்று தெரிவித்தார். இந்த போக்கு பெண்களின் மீதான அடக்குமுறையை இந்துத்துவா சக்திகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக உள்ளது. இன்னும் மனுதர்மத்தையே தத்துவ வழிகாட்டு நூலாக ஏற்கும் இவர்களின் போக்கு பெண்களை பாலில் ரீதியாக சுரண்டும் போக்கை நடைமுறையாக ஏற்றுக்கொள்ளும் ஆபாயம் உள்ளது.