பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து தற்போது அதில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேருக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர்களை சி.பி.ஐ நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிடப்பட்ட செயல் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராம்ஜென்ம பூமி என்ற கருத்தியலுடன் ஜெய் ஸ்ரீராம் என்று கூவிக் கொண்டு கையில் ஆயுதங்களுடன் படையெடுத்துச் சென்ற கரசேவகர்கள் எனும் இந்துத்துவ மதவாதிகளால் டிசம்பர் 6, 1992 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது.
அதற்கு டிசம்பர் 5-ம் தேதி பாபர் மசூதியை இடிப்பதற்கு கரசேவகர்கள் ஒத்திகை பார்த்த காட்சிகளை ஒளிப்பட பத்திரிக்கையாளர் பிரவீன் ஜெயின் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார். இடிக்கும் போதும், இடித்த பிறகு மதவாதிகளின் கொண்டாட்டத்தினையும் இன்னும் சில புகைப்படவியலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒளிப்படம் எடுத்த புகைப்பட நிருபர்களை கரசேவகர்கள் துரத்தியிருக்கிறார்கள். எந்த ஆதாரமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிருபர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்து அவற்றை ஆவணங்களாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீராம் என்று அச்சிடப்பட்ட செங்கற்கள் ராமஜென்ம பூமி கோயில் கட்டுவதற்காக அயோத்திக்கு வரவழைக்கப்பட்டது.
ஜூலை 1992-ல் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பணி உத்திரப்பிரதேச பாஜக அரசால் 2.77 ஏக்கர் ஒதுக்கப்பட்டு நடத்தப்பட்டது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் வேலையைத் துவங்கிய கரசேவகர்கள்
இசுலாமியர்களின் இறுதி மரியாதை செய்து புதைக்கும் இடத்தில் மண்ணை நிரவி ஏற்பாடுகளை மேற்கொண்டனர், அப்போது கிடைத்த மனித எலும்புகளுடன் கரசேவகர்கள்
அயோத்தியில் சூழ்நிலையை பார்வையிட வரும்போது டிசம்பர் 3, 1992 அன்று ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் சிங், பிரதமர் நரமசிம்மராவுக்கு தொலைபேசியில் தகவலை தெரிவிக்கிறார்.
டிசம்பர் 5-ம் தேதி பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பு கரசேவகர்கள் “ரத்தத்தைக் கொடுப்போம், உயிரைக் கொடுப்போம்” என்று சுவர்களில் எழுதுகிறார்கள்.
பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பான ஒத்திகையின் போது கரசேவகர்களுடன் சேர்ந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” முழக்கமிடும் காவல்துறை அதிகாரி ஒருவர்.
சுத்தியல், மண்வெட்டி போன்றவற்றுடன் இடிப்பதற்கான ஒத்திகையில் வரிசையில் நிற்கும் கரசேவகர்கள்.
ஒத்திகையின் போது இடிப்பதற்கான பயிற்சி கரசேவகர்களுக்கு வழங்கப்படுகிறது.
மசூதியை இடித்த பிறகு எப்படி இழுத்துத் தள்ளுவது என்ற பயிற்சி வழங்கப்படுகிறது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் தினம் இரவு
டிசம்பர் 6-ம் தேதி இடிப்பதற்கு முன்பு அடையாளமாக சராயு ஆற்றிலிருந்து மண் மற்றும் நீரை கரசேவகர்கள் கொண்டு வருகிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்படும் நாளன்று காலையில் அத்வானி ராமஜென்ம பூமி இயக்கத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்படும்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஜயராஜே சிந்தியா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் அங்கு இருக்கிறார்கள்.