திமுக அமைச்சரவை

திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் பொதுத்தேர்தல் முடிந்து 133 இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க உள்ளது. மே 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 14 பேருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்கள்

கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கீதா ஜீவன் ஏற்கனவே திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். புதுமுகமான கயல்விழி செல்வராஜ் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனை வீழ்த்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்கள்

அதிமுகவிலிருந்து சமீபமாக திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அமைச்சர்களை எதிர்த்து வெற்றி பெற்றவர்கள்

அமைச்சர் சரோஜா மற்றும் பாண்டியராஜனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிவேந்தன், ஆவடி நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான பட்டியல் இதோ:

1. ஸ்டாலின் – முதலமைச்சர்

2. துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

3. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

4. ஐ.பெரியசாமி – கூட்டுறவுத் துறை அமைச்சர்

5. பொன்முடி – உயர்கல்வித் துறை அமைச்சர்

6. எ.வ.வேலு – பொதுப்பணித் துறை அமைச்சர்

7. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்

8. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

9. தங்கம் தென்னரசு – தொழிற்துறை அமைச்சர்

10. கோ.ரகுபதி  – சட்டத் துறை அமைச்சர்

11. முத்துசாமி – வீட்டு வசதித் துறை அமைச்சர்

12. பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

13. தா.மோ.அன்பரசன் – ஊரக தொழிற்துறை அமைச்சர்

14. மு.பெ.சாமிநாதன்  – செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர்

15. கீதா ஜீவன்  – சமூகநலத் துறை, மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

16. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

17. ராஜகண்ணப்பன்  – போக்குவரத்துத் துறை அமைச்சர்

18. கா.ராமச்சந்திரன்  – வனத்துறை அமைச்சர்

19. சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர்

20. செந்தில்பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

21. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

22. மா.சுப்பிரமணியம் – மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர்

23. பி.மூர்த்தி – வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

24. எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

25. சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்

26. பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்

27. ஆவடி நாசர் -பால்வளத் துறை அமைச்சர்

28. மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

30. மெய்யநாதன்  – சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

31. சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

32. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

33. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

34. கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *