தமிழ்நாட்டு பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளை உடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறு தெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படி கருப்பசாமி என்ற தெய்வம் கோபுர வாசலில் உரைக்கின்றது. எனவே கோபுரவாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்று அழைக்கப்படுகின்றது.
மேலும் பார்க்க பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்