இல்லம் தேடி கல்வி Illam thedi Kalvi எனும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுதும் 1.7 லட்சம் தன்னார்வலர்களை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப் போகிறது. தன்னார்வலர்களை நியமிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டம் என்றும், இது புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் என்றும் இத்திட்டத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தனது வித்யா பாரதி, ஏகல் வித்யாலயா போன்ற நிறுவனங்களை பயன்படுத்தி எப்படி மாணவர்களிடத்தில் காவி அரசியலைப் பரப்பி வருகிறது என்பது குறித்த புதிய தகவல்களை விரிவாக இக்காணொளியில் காணலாம். இத்திட்டம் குறித்து தமிழக அரசுக்கு சில மாற்று ஆலோசனைகளையும் Madras Review முன்வைக்கிறது.
முழுமையான காணொளி
கீழே உள்ள இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம். மற்ற வீடியோக்களைப் பார்க்க Madras Review யூடியூப் சேனலை Subscribe செய்யவும்.