“வள்ளலாருக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவசமயம் சார்ந்ததாக இருந்தது. அவருடைய வருகைக்குப் பிறகுதான் சைவசமய சன்மார்க்கம் என்பது சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய சன்மார்க்கத்தை ஏற்க மறுத்துச் சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்ட முயன்ற வள்ளலார் சமயங்களின் தளத்துக்குள் ஒரு புரட்சிக்காரராகவே அடியெடுத்து வைத்தார். விக்கிரக வழிபாட்டை விட்டு விலகினார். துறவுக் கோலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காவியைக் கைவிட்டு வெள்ளாடை அணிந்தார். கோவிலைச் சபை என்றார். ஒளியே வழிபாட்டிற்குரியது என்றார்.
மேலும் பார்க்க வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்