எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்

பெண்கள் தொடர்பான ஜியார்ஜின் படங்களை இரு விதங்களில் பிரித்துக் கொள்ளலாம். ஓன்று, குடும்பம் எனும் அமைப்பின் அதிகாரச் சமநிலையின்மையையும் வன்முறையையும் சகிக்க முடியாமல் அதனுள் பெண்கள் மூச்சுவிடமுடியாமல் கலகம் செய்கிறார்கள். அந்தக் கலகம் மணமீறல் உறவுகளாக, மனப்பிறழ்வுகளாக, வெளியேறுதலாக முடிகிறது. இரண்டு, பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீதான வன்முறையை அவர்கள் எதிர்வில் கொலைகளாக, தற்கொலைகளாக, குற்றச்செயல்கள் எனச் சமூகம் கருதுவதற்குள் வீழ்கிறார்கள். இந்தப் போக்கில் பெண்களை மதிப்பீட்டுக்குள் வீழ்த்திவிடாமல் அவர்களின் மீதான பரிவை ஜியார்ஜின் படங்கள் கோருகின்றன. 

மேலும் பார்க்க எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்
மார்க்ஸ் அம்பேத்கர்

சோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்

இன்றைய நிலையில், வர்க்கத்துக்கு இணையானது சாதி, இந்துமதம்-சாதி- பார்ப்பனியம்-இந்திய அதிகார அமைப்பு என்கிற அம்பேத்கரது வலியுறுத்தலை ஏற்று அம்பேத்கரை மார்க்சியர்கள் தமது அனைத்தும் தழுவிய முழுமையான கம்யூனிசத் திட்டத்தினுள் ஏற்க முடியும். உண்மையில் இந்திய சோசலிசம் நோக்கிய மார்க்சிய வழியில் இருக்கிற தடைக்கற்களைத் தான் (Hindrance) அம்பேத்ரும் பெரியாரும் அக்கறையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் பார்க்க சோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்
ரஷ்யப் புரட்சி

ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?

ரஷ்யப் புரட்சி வன்முறையின் வகைப்பட்டதா? ஸ்டாலின் எப்படிப்பட்டவர்? கம்யூனிசம் தோற்றுவிட்டதா? கம்யூனிசம் குறித்த எழுத்தாளர் ஜெயமோகனின் பல்வேறு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்.

மேலும் பார்க்க ரஷ்யப் புரட்சி வன்முறையா? கம்யூனிசம் தோற்றுவிட்டதா?
கள்ளத்தோணி

சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்

காலனியாதிக்க எதிர்ப்புச் சிங்கள ஆளும்வர்க்கம் எவ்வாறு இலங்கைத் தேசிய விடுதலை என்பதையே மலையகத் தமிழர்கள் அந்நியர்கள் என்பதை முகாந்தரமாக வைத்துக் கட்டமைத்தது என்பதையும், முத்தரப்புத் தமிழர்களையும் அதன் தொடர்ச்சியான எதிர்மையாகக் கட்டமைத்தது என்பதையும் கட்டுரைகள் சொல்கின்றன.

மேலும் பார்க்க சரவணனின் கள்ளத்தோணி – யமுனா ராஜேந்திரன்

இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்

பிபிசி ஆவணப்படத்தின் இந்திய அளவிலான உள்நாட்டுப் பரிமாணமும் அதன் விளைவுகளுமே இந்திய நோக்கிலிருந்து பார்க்கப்பட வேண்டும். மோடி அரசின் மனித உரிமை மீறலாகவோ, இந்து-முஸ்லீம் பிரச்சினை சார்ந்த வெறுப்பாக மட்டும் இதனைக் குறுக்காமல், ஆர்எஸ்எஸ்சின் இந்தியா தழுவிய பாசிசக் கருத்தியலை அம்பலப்படுத்துவதாகவே இந்த ஆவணப்படத்தை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பார்க்க இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்
இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்

ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகன் வெளிப்படுத்திய முழுமையற்ற முரண்பாடான கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் பொருட்டு ”இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் ஜெயமோகனின் கலாச்சார அரசியல்” என்ற தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்களின் கருத்துக்க்ள் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க ஜெயமோகன் இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் – புத்தக அறிமுகம்