anti hindi protest

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்தி பரவலாக ஆதரவை திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைபயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் மொழியுணர்வு ஊட்டி பெருக்கப்பட்டது.

மேலும் பார்க்க 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1
பெரியார்

தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி

காங்கிரஸ் ஒற்றைவாதத்தைக் கட்ட முயற்சித்த போது அந்த ஒற்றை வாதத்திற்குள் தென்நாடு இல்லை என்றும், தமிழ்நாடு இல்லை, திராவிட நாடு இல்லை என்று திராவிட இயக்கம் பேசியது. இந்தி என்கிற ஆதிக்க மொழிக்கு எதிராக தமிழ் உணர்வு கொண்டு கிளர்ந்து எழுந்து மக்களை அணி திரட்டி களம் கண்டதும் திராவிட இயக்கம் தான். தமிழ்த்தேசிய அரசியல் உருவாக்கத்தில் முதல் ஏட்டையே மிக வீரியமுடன் முன்னெடுத்த இயக்கம் திராவிட இயக்கம்.

மேலும் பார்க்க தமிழ்த்தேசிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தின் பெரும் பணி
திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்

திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்

கபசுரக் குடிநீரை அரசு பரிந்துரை செய்யும் போதிலும், சித்த மருத்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வருகிற பொழுதும், சித்த மருத்துவத்தை ஆதரிப்பவர்களை நோக்கி ’பிற்போக்குவாதிகள்’, ’அறிவுக்கு உதவாதவர்கள்’ என்ற வாதம் தொடர்ச்சியாக அறிவியலின் பெயர் கொண்டு பலரால் முன்வைக்கப்படுகிறது. பாரம்பரிய மாற்று மருத்துவ சிந்தனை முறையினை ஆய்வுக்குட்படுத்தாமலே புறக்கணிக்கும் அடிப்படைவாதத்தை முன்வைக்கின்ற இந்த வாதத்திற்கு நேர் எதிராகவே எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக பகுத்தறிவுப் பார்வையில் அணுகுகிற திராவிட இயக்கத்தினர் செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

மேலும் பார்க்க திராவிட இயக்கமும் சித்த மருத்துவமும்
பொங்கல்

பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறு

மகா சங்கராந்தி வாழ்த்து என்று பாரதிய ஜனதா கட்சி சுவரொட்டி ஒட்டி இருக்கிறது. நம்ம வீட்டு பொங்கல் என்று பஞ்சு பொங்கலை குஷ்புவும், எல்.முருகனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், தமிழர் என்று சொன்னாலே ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் இன்று அரசியல் காரணங்களுக்காக தமிழர் திருநாளைக் கொண்டாடத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த பொங்கல் ஒரு தேசிய இன திருவிழாவாக மாற்றப்பட்டு முன்னிறுத்தப்பட்டது திராவிட இயக்கத்தால் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் பார்க்க பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறு