தூய்மைப் பணியாளர்கள்

கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு

முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.

மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
மருத்துவர் லோகேஷ்குமார்

மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு

மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. ஆனால் அரசு இதனை மறைக்கவே முயற்சி செய்தது. சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை லோகேஷ் மரணம் குறித்து யாரும் பேசக் கூடாது என்று கூறியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் பார்க்க மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததை மறைத்து மரணத்தை கொச்சைப்படுத்துகிறது அரசு
கொரோனா மாறுபாடுகள்

உலகெங்கும் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வுகள்- வகைகள், அபாயங்கள்

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸின் வகைகளானது மிகவும் அதிவிரைவாக பரவக்கூடியவையாக இருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த முக்கிய வைரஸ் வகைகளை பார்க்கலாம்.

மேலும் பார்க்க உலகெங்கும் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வுகள்- வகைகள், அபாயங்கள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?

சேப்டி புரொபைல் எனப்படும் 3 கட்ட சோதனைகளை முடித்த பிறகே தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடியாத நிலையில், 2 கட்ட சோதனைகளிலேயே தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவரச அவசரமாக கொண்டுவர முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டதாக சொல்லும் அந்நிறுவனம் அச்சோதனையின் முடிவுகளை இன்னும் வெளியிடவே இல்லை.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை எலிகளா நாம்? பரிசோதனை முடியும் முன்னே ஏன் அவசரம்?
லீலா பேலஸ்

சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!

இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!
ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நிவாரண உதவிகள் செய்வதற்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அனுமதியளித்தது. அந்த பட்டியலில் ஏறத்தாழ 736 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்புகளாக இருக்கின்றன.

மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நிதி ஒதுக்கியதா ’நிதி ஆயோக்’?
மரபணு மாற்றமடைந்த வைரஸ்

புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்

கடந்த வாரம் முதல் மேற்குலக நாடுகள் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவலை எண்ணி நிலைகுலைந்து போயிருக்கின்றன. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் அனைவரிடமும் சொல்லொண்ணா அச்சத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இங்கு அதைப் பற்றிய சிறிய விளக்கத்தை பார்ப்போம்.

மேலும் பார்க்க புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்
india - uk flights

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி வரை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மேலும் பார்க்க மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்
மாற்றுத் திறனாளிகள்

கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு

இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு