நாம் எல்லோரும் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த 3 கிராம் போதைப் பொருட்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதானி துறைமுகத்தில் 21,000 கோடி முதல் 2 லட்சம் கோடி வரையிலான தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு போதைப் பொருட்கள் ஒரே நேரத்தில் பிடிபட்டதில்லை. ஒட்டுமொத்த இளைஞர்களையும் சீரழிக்கும் இந்த கடத்தல் பற்றி ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசுவோம்.
மேலும் பார்க்க மூட்டை மூட்டையாய் அதானி துறைமுகத்தில் ஹெராயின்! மீடியாஸ் ஏன் மறைக்குறீங்க?Tag: அதானி
மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை
இந்தியாவின் அதானி குழுமம் மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டாலர் பணம் செலுத்திய செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமம் அந்த நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பொருளாதாரக் கார்ப்பரேசனுடன் ஒரு நில குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளது.
மேலும் பார்க்க மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பானது 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு ஒரு ஆண்டில் உயர்ந்திருக்கிறது.
மேலும் பார்க்க 2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?
இலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன.
மேலும் பார்க்க கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?விதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!
விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்திற்கு 6 விமான நிலைய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தும் அது பொருட்படுத்தப்படவில்லை.
மேலும் பார்க்க விதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?
கடந்த மாதம் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் (ஆஸ்திரேலிய தூதுவர் போன்றவர்) பேரி ஓ ஃபரேல் (Barry O’Farrel), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது சர்ச்சயை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய செனேட் சபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, அவர் பதவி விலக வேண்டுமென விவாதமாகியுள்ளது.
மேலும் பார்க்க புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து
அடையாறும் கூவமும் சேர்ந்து கொண்டுவரும் நீரைப்போல இரண்டு மடங்கு நீரை கொசஸ்தலையாறு கொண்டுவருகிறது. “அடையாற்றின் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டதால், 2015-ல் சென்னை பெருவெள்ளத்திற்கு ஆளானது என்றால், கொசஸ்தலையாற்றின் வெள்ளம் இப்பிராந்தியத்தையே முடக்கிப்போட்டுவிடும்.”
மேலும் பார்க்க சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்துசென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும் பார்க்க சென்னையில் உள்ள அதானி குழும எண்ணெய் கிடங்குகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!