பெண்களின் முன்னேற்றம்

பெண் சுதந்திரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னிலையில் தென்னிந்தியப் பெண்கள்

தென்னிந்தியாவும், வட இந்தியாவும் பண்பாடு, மொழி மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதேபோல் பெண்கள் முன்னேற்றத்திலும் தென்னிந்தியாவிற்கும், வட இந்தியாவிற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மேலும் வரலாறு முழுவதுமே இந்த வேறுபாடு இருந்திருகிறது

தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கும், திருமண வயதை தாங்களே தீர்மானித்துக் கொள்வதற்கும், தங்கள் கணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும், சொந்தமாக சொத்துக்களை வைத்திருப்பதற்கும், நண்பர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும்,  அவர்களின் சமூகங்களில் மிகவும் சுதந்திரமாக இயங்குவதற்கும், ஆண்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் பெரிய அளவில் தடைகள் இல்லை என்றும் பல ஆய்வுகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.

வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பெண்கள் குடும்பத்தினரால் மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் பாலின வேறுபாடு விகிதங்கள் மிக அதிகமாக உள்ளது. 

1881-1951 வரையிலான ஆண்டுகளில் பெண்களின் கல்வி அறிவு
நகரப் பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் விகிதம்
ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான் பெண்கள் சாப்பிடும் விகிதம் மாநிலங்கள் வாரியாக
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அனுமதி கேட்டு விட்டு செல்ல வேண்டிய பெண்களின் விகிதம்
கணவரை தேர்ந்தெடுக்கும் உரிமையில்லாத பெண்களின் விகிதம்
வயதான காலத்தில் மகன்களின் தயவில் மட்டுமே வாழ முடியும் நிலையில் உள்ள பெண்கள்

ஒரே மாதிரியான பணம் மற்றும் சாதி, மத பின்புலங்களைக் கொண்ட பெண்களிலும் கூட, வட மாநிலங்களை விட கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகளை தென்மாநிலங்களில் தான் அதிகமாக பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.  

1900 ஆண்டுகளில் இருந்து பெண் சுதந்திரத்தில் வட இந்தியாவை விட தென்னிந்திய பகுதிகள் முற்றிலும் வேறுபட்டுதான் இருந்துள்ளது. 1800-களுக்கு சென்றாலும் இது நமக்குத் தெரியும். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுதல் எனும் சம்பவங்களில் 90% வங்காளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மதம் மற்றும் சாஸ்திரங்கள் தொடர்பான சடங்குகள் போன்றவை பழங்குடிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு நாளும் இருந்ததற்கான அறிகுறிகள் கூட இல்லை. அதேபோல இடைக்காலத்தில் உள்ள கோயில் கல்வெட்டுகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெண்களுக்கு நிலம் சொந்தமாக கொடுக்கப்பட்ட ஆதாரங்களும் இருக்கின்றன. இவை பெண்களுக்கு தென்னிந்திய பகுதிகளில் சொத்துடமை இருந்ததற்கான ஆதாரங்களாக இருக்கின்றன. 

காலனிய காலத்தில் வட இந்தியாவில் தாராளவாத இந்திய தேசியவாதிகள்   சிலர் பெண்கள் உரிமை குறித்து பேசத் துவங்கியிருந்தனர். அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெண்கள் திராவிட இயக்கத்தில் சேர்ந்து முக்கியமான சமூக சீர்திருத்தங்களை விவாதித்தனர்.  

தமிழ்நாட்டு பெண்கள் 1929-ல் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வேண்டும் என்று அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில்  இராணுவத்திலும் காவல் துறையிலும் பெண்களின் வேலைவாய்ப்பிற்கு குரல் எழுப்பப்பட்டது.

இந்தியாவில் பெண்கள் முதலில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் சென்னை மாகாணத்தில்தான். சென்னை சட்டசபையில் துணைத்தலைவராக முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 1921-ம் ஆண்டு வாக்களிக்கும் உரிமைக்காக வங்காளப் பெண்கள் போராடிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: Dr Alice Evans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *