சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,79,424 ஆக உள்ளது. 13,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 10 என்ற எண்ணிக்கையில் இருந்த கட்டுப்படுத்த பகுதிகளின் (Containment Zones) எண்ணிக்கை ஒரே வாரத்தில் 70 ஆக அதிகரித்திருக்கிறது.
அம்பத்தூர் மண்டலம் இந்த வாரத்தில் அதிக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 11 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளோடு தண்டையார்பேட்டை மண்டலம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆலந்தூரில் 5, அடையார், மணலி, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 4, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் தலா 3, சோழிங்கநல்லூர், ராயபுரம், திருவிக நகரில் தலா இரண்டு, வளசரவாக்கத்தில் ஒனறு என கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை இருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் – 1,332 பேர்
அண்ணா நகர் – 1,382 பேர்
தேனாம்பேட்டை – 1,336 பேர்
தண்டையார்பேட்டை – 931 பேர்
ராயபுரம் – 982 பேர்
அடையாறு- 1,092 பேர்
திரு.வி.க. நகர்- 1,215 பேர்
வளசரவாக்கம்- 826 பேர்
அம்பத்தூர்- 1,000 பேர்
திருவொற்றியூர்- 400 பேர்
மாதவரம்- 565 பேர்
ஆலந்தூர்- 706 பேர்
பெருங்குடி- 585 பேர்
சோழிங்கநல்லூர்- 314 பேர்
மணலியில் 252 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சென்னையில் பரிசோதனை செய்யப்படுவதில், தொற்று உறுதி செயபவர்கள் சதவீதம் 8.3 இருந்து 9.9 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதனையில் தொற்று சதவீதம் சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 9.1 ஆகவும், கோவையில் 8.8 ஆகவும் உயார்ந்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி கோவையில் 8.4% சதவீதமாகவும், செங்கல்பட்டில் 7.2% சதவீதமாகவும் இருந்தது.
கடந்த வெள்ளியன்று வெளியான மொத்த தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.