பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சில் உறுப்பினர்கள் நாளை நடக்க இருக்கும் விவசாயிகளின் பாரத் பந்தில் கலந்து கொள்வார்கள் என்று பத்திரிக்கை வாயிலாக பார் கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது.
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
“The Bar Council of Punjab and Haryana oppose the new Agriculture Acts passed by the Central government. These new enactments are not only detrimental to the interests of farmers but are also detrimental to the interest of lawyers. The Bar of civil court jurisdiction in these new Acts is serious challenge to the independence of judiciary.”
“மத்திய அரசு நிறைவேற்றிய புதிய விவசாய சட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பார் கவுன்சில் எதிர்க்கிறது. இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், வழக்கறிஞர்களின் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த புதிய சட்டங்களில் சிவில் நீதிமன்ற அதிகார வரம்பு குறைக்கப்படுகிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளது.”
நீதித்துறையை குறைத்து மதிப்பிடும் விவசாய சட்டம்
“The separation of judiciary and executive is a salient feature of our constitution. Under the new Acts the disputes will be heard by SDM/ADMs who are not trained to hear the litigation involving civil consequences and moreover, they are administrative organ of the Government and would be unable to protect the rights of farmers. The disputes arising out of new enactments will involve commercial matters, contract act agreement and partnership matters which is under the preview of civil courts and therefore, baring the civil court jurisdiction is detrimental to the interest of lawyers and is an effort to undermine the judiciary.”
“நமது அரசியலமைப்பு நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையை தெளிவாக வரையறுத்துள்ளது. இதைப் புதிய சட்டங்கள் பொருட்படுத்தத் தவறிவிட்டது. புதிய சட்டங்களின் படி துணை மாஜிஸ்திரேட் மற்றும் கூடுதல் மாஜிஸ்திரேட்களின் தலைமையில் விவசாய முரண்பாடுகள் களையப்படும் என்று பரிந்துரைக்கிறது. இந்த சிறப்பு ஏற்பாடு அரசாங்கத்தின் நிர்வாக உறுப்பாக மட்டும்தான் செயல்படும். அதனால் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க இயலாது. புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எழும் மோதல்கள் அனைத்தும் வணிக ரீதியானவை. எனவே அவை சிவில் நீதிமன்றங்களின் கீழ் வரும். ஒப்பந்தச் சட்டம் மற்றும் கூட்டு முறைகள் சட்டம் அனைத்தும் சிவில் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டவை. இவைகளை மீறுவதாக உள்ள புதிய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இது நீதித்துறையை குறைத்து மதிப்பிடுவதாகும்.” என்று தெரிவித்துள்ளனர்.
ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கும் அதிகமான வழக்கறிஞர்களைக் கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சில் பாரத் பந்தை ஆதரித்துள்ளது. மேலும் அனைத்து மாநில வழக்கறிஞர்கள் சங்கமும் இதை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
பந்த்-தை ஆதரிக்காத இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கை
இந்த சூழ்நிலையில் இன்று இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (BAR COUNCIL OF INDIA) பாரத் பந்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விடுத்துள்ளது. அதை கடிதத்தின் வாயிலாக அனைத்து மாநில வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய விவசாய சட்டத் திருத்தத்தில் பின்வரும் பரிந்துரையை இணைக்கும்படி கேட்டுள்ளது.
- உழவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு நீதித்துறை அதிகாரியின் தலைமையில் சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.
- வழக்குகளுக்கு விவசாயிகளுக்கு தங்களுக்கு விருப்பமான வழக்கறிஞர்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
- சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
- மன்றத்தின் உத்தரவுகள் அல்லது முடிவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் உறுதி
ஆனால் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்த திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், சட்டங்களை திரும்பப் பெறும் போராட்டத்தை முடிக்க மாட்டோம் என்று நடந்து முடிந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
நாளை நடக்க உள்ள பாரத் பந்த்-க்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
முகப்புப் படம்: கோப்பு
100 % உண்மை. விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க மற்றும் விளை நிலங்களில் GAIL pipeline பதிக்க தடை கோரி தமிழக உழவர்கள் சென்னை உர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்ற போது அந்த வழக்கை களப்பணி செய்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க சம்பந்த பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்க பட்டது. ஆனால் அந்த மாவட்ட ஆட்சியர்கள் தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை மறந்து மக்களை மூளை சலவை செய்யும் விதமாக ஆட்டை தருகிறோம் மாட்டை தருகிறோம், விதவை பென்ஷன் தருகிறோம், முதியவர்கள் பென்ஷன் தருகிறோம், என்று மக்களை திசைதிருப்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். நிலங்களை தருவதும் தராமல் இருப்பதும் தங்களின் உரிமை என்று மக்களுக்கு ஊக்கம் தந்த வழக்குரைஞர் களை மக்களின் முன்பே அவமானம் செய்தார்கள் அந்த அதிகாரிகள். மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதை மறந்து அவர்களை அச்சுறுத்தி, ஒரு சர்வாதிகாரி மன பான்மையை மேற்கொண்ட இந்த அதிகாரிகள் நீதிமன்ற நீதிபதிகள் இல்லை. அவர்கள் வெறும் Executive Magistrate. கொச்சையாக சொல்லபோனால் அரசியல் வாதிகளின் படித்த கைக்கூலிகள். அவர்களுக்கு நடுநிலை தன்மை என்பது வரவே வராது. அரசாங்கத்தின் சர்வாதிகார சட்டங்களை சம்பளம் வாங்கிகொண்டு மக்கள் மேல் தினிக்கவும் அவர்களை பிரிதாளவும் மேலும் இடமாற்றம் பெற்று வேறு ஊர் மக்களின் வாழ்க்கையை கெடுக்க பதவி உயர்வு பெற்று செல்லும் இவர்கள் வெள்ளைக்காரன் கொண்டு வந்த சட்டத்தின் எச்சங்கள். இவர்களுக்கு இன்னும் தாங்கள் வெள்ளைக்கார வம்சாவளி Collector கள் என்ற எண்ணம் உண்டு. இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது என்ற செய்தி இவர்களுக்கு அவ்வபோது பயிற்சி என்ற போர்வையில் மரகடிக்க படும். எவ்வளவு மரக்கிரார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு வளர்ச்சியும் உண்டு என்று மறைமுகமாக ஊக்கு விக்க படுவார்கள்.