1. சாதியும் சமூகமும்
18 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2002-ம் ஆண்டு சாதியும், சமூகமும் என்ற தலைப்பில் தலித் முரசு மற்றும் காஞ்சனை ரீல் இணைந்து தொ.பரமசிவன் அவர்களிடம் எடுத்த நேர்காணல். சாதியின் அடிப்படை, மனுவின் வரலாறு, பார்ப்பனியம், உணவு அரசியல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பண்பாட்டு பின்னணியிலிருந்து பேசுகிறார்.
2. சமணம் – ஓர் உரையாடல்
20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சமண மலையில் இருந்து தமிழ்நாட்டில் சமணத்தின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த முக்கியமான உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.
3. பாளையங்கோட்டை வரலாறு
பாளையங்கோட்டையின் வரலாற்றுப் பின்னணியை விளக்கி தொ.பரமசிவன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்.
4. நம்மாழ்வார் பற்றி தொ.பரமசிவன்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களைப் பற்றி, அவரோடு தனக்கு நிகழ்ந்த உரையாடலைப் பற்றியும், உலகமயமாக்கல் தமிழர்களின் வாழ்வை எப்படி சிதைத்தது என்பது பற்றியும் விளக்குகிறார் தொ.பரமசிவன். இந்த காணொளியை பூவுலகின் நண்பர்கள் மற்றும் காஞ்சனை ரீல் இணைந்து எடுத்திருக்கிறார்கள்.
5. பெரியாரும் தமிழ்த்தேசியம்
2015-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பில் பெரியாரும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் ஒரு மணி நேரம் தொ.பரமசிவன் அவர்கள் ஆற்றிய மிக முக்கியமான உரை. தமிழ்த்தேசியம் என்பது என்ன, இந்தியாவில் தேசிய இனங்களின் சிக்கல், பெரியார் ஏன் தமிழ்த்தேசியத்தில் முக்கியமானவர் என்று பல்வேறு கோணங்களில் பேசியிருப்பார்.