வானியல் புகைப்படங்கள்

சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்

லண்டனில் இயங்கக்கூடிய ‘ராயல் மியூசியம்ஸ் கிரீன்வீச்’ (Royal Museums Greenwich) அமைப்பானது அங்கிருக்கக்கூடிய வானியல், வரலாறு மற்றும் கடலியல் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து இயங்கக்கூடியது. இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும், ஆய்வு மேற்கொள்ளும் பல்வேறு துறைகளைச் சார்ந்த புகைப்படங்களை பரிசீலித்து சிறந்த புகைப்படங்கள் என்ற வரிசையின் கீழ் விருது வழங்குகிறது. இந்த வருடத்தின் பரிசிற்கான சிறந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அவை

இறுதி வெற்றியாளர்கள்- 2020

“விண்மீன்” மற்றும் அனைத்திலும் சிறந்த புகைப்படம் 2020 – ஆன்ட்ரமீடா விண்மீன் கூட்டம் – Galaxies Winner and Overall Winner – Andromeda Galaxy at Arm’s Length

புகைப்படம் எடுத்தவர் – நிக்கோலஸ் (Nicolas Lefaudeux)
புகைப்படக் கருவி -SkyWatcher Black Diamond 100mm apochromatic refractor telescope. Sony ILCE-7S camera (modified)       (2 hours 30 minutes total exposure)

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள் :

“தொடக்கத்தில் இருந்தே பல நடுவர்களின் கற்பனையை ஈர்த்த ஒரு புதிரான அதே சமயம் மிகவும் இயல்பான படம்.” – ஜான் குல்ஷா (Jon Culshaw, comedian, impersonator and regular guest on The Sky at Night)

“இந்த ஆண்டின் போட்டியில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று உறுதியாக சொல்வேன், மேலும்  அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு பெரிய புன்னகையைத் தருகிறது.”

-எட் ராபின்சன், விருது பெற்ற புகைப்படக் கலைஞர் (Ed Robinson, award-winning photographer, creative director and visual consultant)

’வானம்” தலைப்பின் வெற்றியாளர் – “வான் வரைந்த ஓவியம்”
Skyscapes Winner – Painting the Sky

புகைப்படம் எடுத்தவர் – தாமஸ் காஸ்ட் (Thomas Kast)

புகைப்படக் கருவி – Nikon D850 camera, 120 mm f/16 lens, 1/40-second exposure.

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“சிப்பியைப் போன்ற மேகங்கள் அபூர்வமாக தோன்றுவதென்பது நம்மை மிகவும் வசீகரிக்கும் வளிமண்டல நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த புகைப்படக்காரரைப் போலவே, நீதிபதிகளும் இந்தப் படத்தின் அழகில் மெய்மறந்தனர். இது இயற்கையில் காணக்கூடிய சிறப்புவாய்ந்த, அழகான தூரிகைகளை மகிழ்ச்சியுடன் படம் பிடித்திருக்கிறது”.

-மெலனி வாண்டன்ப்ரூக், கலை கண்காணிப்பாளர்.(Melanie Vandenbrouck, Curator of Art (post-1800) at Royal Museums Greenwich)

“இந்த அரிய, நம்பமுடியாத உயர் நாக்ரியஸ் மேகங்கள் தண்ணீரில் எண்ணெய் சிதறினால் தோன்றக்கூடிய நிறங்களை பிரதிபலிக்கின்றன. மேலும் இந்த புகைப்படக்காரர் அவற்றை மிகச்சரியாக பதிவு செய்திருக்கிறார். நுட்பமான செயலாக்கத்துடன் காணக்கூடிய இந்த புகைப்படம் நம் வானத்தில் காணக்கூடிய இயல்பான சாயல்களை புகைப்படத்தில் அப்படியே பிரதிபலிக்கிறது.”

– ஸ்டீவ் மார்ஷ், பத்திரிகையாளர் (Steve Marsh, Art Editor at the BBC Sky at Night Magazine)

“சூரியன் ” தலைப்பின் வெற்றியாளர் -” நீராலான சூரியக்கதிர்”
Our Sun Winner – Liquid Sunshine

புகைப்படம் எடுத்தவர் – அலெக்ஸாண்ட்ரா ஹார்ட் (Alexandra Hart)

புகைப்படக் கருவி – Celestron C11 XLT Schmidt-Cassegrain telescope at f/50, ZWO-ASI174MM camera, 8.431-millisecond exposure

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

” சூரியனின் மேற்பரப்பில் சலனங்கள் குறைந்திருக்கும் போது நாம் நினைப்பது போல சூரியன் ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை. அதன் அடிப்பாகத்தில் அணு இணைவு நிகழ்ந்து கொண்டிருக்கும். அதுவே இந்த சிறிய உலகத்தில் வாழக்கூடிய உயிர்களின் வாழ்வாதாரம்”

-எமிலி டிராபெக், வானியல் ஆய்வாளர்.(Emily Drabek-Maunder, astrophysicist, astronomer)

“மிகவும் விசித்திரமான,நம்பிக்கையூட்டக்கூடிய புகைப்படம். வானியல் பற்றிய அறிவியலுக்கும் உதவுகின்ற ஒரு புகைப்படம். விண்ணியல் சார்ந்த போட்டிகளில் நான் விரும்பக்கூடிய புகைப்படம்”

-எட் ராபின்சன், விருது பெற்ற புகைப்படக் கலைஞர் (Ed Robinson, award-winning photographer)

“நிலவு” தலைப்பின்  வெற்றியாளர்- “நிலவின் பள்ளங்கள், வண்ணங்களுடன்”
Our Moon Winner – Tycho Crater Region with Colours

புகைப்படம் எடுத்தவர் – அலைன் பைலூ (Alain Paillou)

புகைப்படக் கருவி – Celestron C9.25 telescope at f/10 and f/6.3,ZWO ASI178MM and ASI178MC cameras,multiple 15-millisecond exposures

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“மிகவும் உயிர்ப்புடன் காணப்படும் இந்த புகைப்படம் சந்திரனின் வண்ணமயமான தளத்தை பிரதிபலிக்கிறது. வண்ணமயமான இந்த புகைப்படம் நிலவின் வளங்களைக் காட்டுகிறது”

-எமிலி டிராபெக், வானியல் ஆய்வாளர்.(Emily Drabek-Maunder, astrophysicist, astronomer)

“சந்திரனின் மிகச் சிறந்த வண்ணங்களின் கலவைப் புகைப்படமாக பார்க்கிறேன். அருகில் இருக்கக்கூடிய ஒன்று எவ்வாறு வண்ணங்களுடன் சிறந்து காணப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது”

– ஸ்டீவ் மார்ஷ், பத்திரிகையாளர் (Steve Marsh, Art Editor at the BBC Sky at Night Magazine)

“துருவப்பகுதி வானியல்” தலைப்பின்  வெற்றியாளர் – “பச்சைநிற பெண்”
Aurorae Winner – The Green Lady

புகைப்படம் எடுத்தவர் – நிக்கோலஸ் ரோம்மெல்ட் (Nicholas Roemmelt)

புகைப்படக் கருவி – Canon EOS R camera,14 mm f/1.8 lens, 4 x 1.6-second exposures

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

” மிகவும் சிறந்த, நுட்பமான புகைப்படம். வாழ்விற்கும் அதன் பின்பான நிகழ்விற்கும் இடையில் நிகழக்கூடிய கால எல்லையை அளக்கிறது. நம்பிக்கையூட்டக்கூடிய புகைப்படம்”

-ஜான் குல்ஷா (Jon Culshaw, comedian, impersonator and regular guest on The Sky at Night)

“வியக்கவைக்கும் ஒரு புகைப்படம். ‘பச்சைநிறப் பெண் ‘ போன்ற வானியல் நிகழ்வு மலைகளுக்கு மேலே செல்வதும், அதன் மற்றொரு பகுதி கீழே தெரியக்கூடிய நீர்ப்பரப்பின் மீது பிரதிபலிப்பதுமான வண்ணக் கலவைகள் ஒருங்கே அமைந்த புகைப்படம்”

-சூசன் டெர்ஜஸ், நுண்கலை புகைப்படக் கலைஞர்

‘கிரகங்கள், வால்நட்சத்திரம் மற்றும் சிறுகோள்கள்’ தலைப்பின்  வெற்றியாளர் -“நமக்கிடையேயான தூரம் …”
Planets, Comets and Asteroids Winner – Space Between Us…

புகைப்படம் எடுத்தவர் – லூக்காஸ் (Łukasz Sujka)

புகைப்படக் கருவி – Sky-Watcher Newtonian 10″ telescope at f/4.8, ZWO ASI178 MM-C camera, 300 x 10-millisecond exposures per channel

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தபட்டிருக்கும் இந்த நேரத்தில் தனிநபர் இடைவெளியை பற்றிய நினைவூட்டலாக இந்த படம் இருக்கிறது. தொலைவையும் அதன் இடைவெளியையும் கேள்வியெழுப்பும் விதமான ஒரு நுட்பம் என்னை ஈர்த்தது”

-மெலனி வாண்டன்ப்ரூக், கலை கண்காணிப்பாளர் (Melanie Vandenbrouck, Curator of Art (post-1800) at Royal Museums Greenwich)

“இந்த தனித்துவமான புகைப்படத்தில் பேரண்டத்தின் தொலைவுகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. சந்திரனும் வியாழனும் அருகருகே தோன்றினாலும், அவை ஏறக்குறைய 700 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளன”

-எமிலி டிராபெக், வானியல் ஆய்வாளர்.(Emily Drabek-Maunder, astrophysicist, astronomer)

“மக்கள் மற்றும் விண்வெளி” தலைப்பின் வெற்றியாளர் –  “தொழில்நுட்ப சிறை”
People and Space Winner – The Prison of Technology

புகைப்படம் எடுத்தவர் – ரஃபேல் (Rafael Schmall)

புகைப்பட கருவி – Sky-Watcher Quattro 200/800 astrograph telescope (modified) at f/4,Canon EOS 6D camera, ISO 1600, 5 x 150-second exposures

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“சில நேரங்களில் அழகாக தோற்றமளிக்கும் அனைத்தும் அதிர்வான உண்மையை வெளிப்படுத்தலாம். இந்த படம் வியப்பூட்டும் அளவுக்கு அழகாக இருக்கிறது. ஒவ்வொரு இரவின் வானத்திற்கும் நமக்குமான தொடர்பு விலைமதிக்கமுடியாத அற்புதமான தருணங்களை வழங்குகிறது. இதை முழுமையாக அறிவதற்கு நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும்?”

“இந்த படம் தீர்க்கதரிசனமாகவும் அல்லது வானியல் மீதான நமது ஆர்வத்தைத் தொடர ஒரு வழியாகவும் விளங்குகிறது. வானம் ஒரு நாள் என்ன ஆகக்கூடும் என்பதற்கான நுட்பமான பார்வை.”

– ஸ்டீவ் மார்ஷ், பத்திரிகையாளர் (Steve Marsh, Art Editor at the BBC Sky at Night Magazine)

“நட்சத்திரங்கள் மற்றும் நெபுலா” தலைப்பின்  வெற்றியாளர் – “பேரண்டத்தின் தீப்பிழம்புகள்”
Stars and Nebulae Winner – Cosmic Inferno

புகைப்படம் எடுத்தவர் – பீட்டர் வார்டு ( Peter Ward)

புகைப்படக் கருவி – Alluna Optics RC-16 telescope at f/8, 5 nm Ha filter, SBIG STX-16803 camera, 32 x 10-minute exposures

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“நெருப்பு, கந்தகம் மற்றும் அதன் கூறுகள் இவற்றைக் கொண்ட ஒரு அதிசய உருவாக்கம் என்று இந்த வியக்க வைக்கும் படத்தைக் குறிப்பிடலாம். இந்த படங்கள் நட்சத்திரங்கள் உருவாவதற்கு முன்பான பிரபஞ்சத்தின் முதல் தருணங்களையும் குறிக்கிறது.”

– மெலனி வாண்டன்ப்ரூக், கலை கண்காணிப்பாளர்.(Melanie Vandenbrouck, Curator of Art (post-1800) at Royal Museums Greenwich)

“இந்த புகைப்படம் சமீபத்தில் நிகழ்த்த ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் கொடூரத்தை மீண்டுமொருமுறை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு புகைப்பட கலைஞர்களும் சிந்திக்கக்கூடிய சிந்தனைகளின் மொழிபெயர்ப்பே அவர்களின் படைப்புகளாகும்”

– எட் ராபின்சன், விருது பெற்ற புகைப்படக் கலைஞர் (Ed Robinson, Award-winning photographer)

“சிறந்த புதுமுகம்” சர் பேட்ரிக் மூர் பரிசு வெற்றியாளர்  – “அலைகள்”
Sir Patrick Moore Prize for Best Newcomer Winner – Waves

புகைப்படம் எடுத்தவர் – பென்ஸ் டோத் (Bence Toth)

புகைப்படக் கருவி – Skywatcher Quattro 200P telescope at f/4, ZWO ASI1600MM Pro camera, RGB-Ha-SII composite,

7 hours 50 minutes total exposure

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“புகைப்படத்தின் செயலாக்கம் மிகச் சிறந்து விளங்குகிறது. முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இதன் கட்டமைப்பை மேம்படுத்தியிருப்பதால் ஒரு மிகப்பெரும் அலையின் முகடு போன்று தோன்றுகிறது”

-மாண்டி பெய்லி, ராயல் வானியல் சங்கத்தின் செயலாளர்.(Mandy Bailey, Astronomy Secretary for the Royal Astronomical Society)

“வளர்ந்து வரும் வானியற்பியல் வல்லுநராக வளரும்போது எந்த ஆழமான விண்வெளிப் பொருளையும் கையாள்வததென்பது வல்லமைமிக்க சவாலாகும், ஆனால் அதன் மையத்தை சிறப்பாக மையப்படுத்தியிருப்பது, இந்த படத்தில் உண்மையையும் அதன் உறுதியையும் நம்பமுடியாத ஆற்றலையும் காட்டுகிறது.

– ஸ்டீவ் மார்ஷ், பத்திரிகையாளர் (Steve Marsh, Art Editor at the BBC Sky at Night Magazine)

“சிறந்த கற்பனையாக்கம்” ஆனி மவுண்டர்  பரிசின் வெற்றியாளர் – “இருள் நதி “
Annie Maunder Prize for Image Innovation Winner – Dark River (detail)

புகைப்படம் எடுத்தவர் – ஜூலி ஹில் (Julie Hill )

புகைப்படக் கருவி – VISTA Survey Telescope, Infrared J 1.25 μm, ESO/VVV Survey/D. Minniti

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

” இந்த புகைப்படத்திற்கான தரவுகள் மிக அருமையாக கையாளப்பட்டிருக்கின்றன. மனித நாகரீகத்தின் தொடக்க நிலையை குறிக்கக்கூடிய பால்வீதி மண்டலத்தின் அமைப்பாகவும் எண்ணலாம். புகைப்படக் கலைஞரின் கற்பனை எல்லையில்லாததாக பரந்து காணப்படுகிறது”

– எட் ராபின்சன், விருது பெற்ற புகைப்படக் கலைஞர் (Ed Robinson, Award-winning photographer)

“இந்த படம் 84 மில்லியன் நட்சத்திரங்களைக் ‘பார்ப்பது’ என்ற நிலையிலிருந்து முப்பரிமாணத்தின் வழியாக அதை பார்வையாளர் ‘உணர்வது ‘ என்ற உன்னத நிலைக்கு மேம்படுத்துகிறது.”

-எமிலி டிராபெக், வானியல் ஆய்வாளர்.(Emily Drabek-Maunder, astrophysicist, astronomer)

“இளம் வெற்றியாளர்” – “நான்கு கிரகங்கள் மற்றும் சந்திரன்”

புகைப்படம் எடுத்தவர் – ஆலிஸ் ஃபாக் ஹேங் (Alice Fock Hang)

புகைப்படக் கருவி – Nikon D610 camera,35 mm f/3.2 lens, 18 x 13-second exposures

புகைப்படத்தினைப் பற்றிய கருத்துகள்:

“ஒரு அற்புதமான காட்சி. நேர்த்தியாகவும், தொழில்ரீதியாகவும் காணக்கிடைக்கும் ஒரு அற்புதமான காட்சி. இது ஒரு அனுபவமிக்க வானியற்பியலாளரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கும் நேரத்தில் ஒரு 10 வயது சிறுவன்தான் இந்த புகைப்படத்தை உருவாகியிருப்பதென்பது மகிழ்வையளிக்கிறது. அது மேலும் ஊக்கமளிக்கிறது. இந்த இளம் திறமையான புகைப்படக் கலைஞர் எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன படத்தை உருவாக்குகிறார் என்பதைக் காணவும் ஆர்வமாயிருக்கிறேன்”

– எட் ராபின்சன், விருது பெற்ற புகைப்படக் கலைஞர் (Ed Robinson, Award-winning photographer)

“பரந்த வானத்தின் நேர்த்தியான விவரங்கள் மற்றும் பல்வேறு வரம்புகளைக் கொண்டுள்ளது. இந்த படத்தின் மாறுபட்ட சமநிலையானது இந்த படத்தை மேலும் அருமையான ஒன்றாக்குகிறது. இது பார்க்கக்கூடிய எல்லா வயதினருக்கும்  அருமையான படமாக இருக்கும்.”

– ஸ்டீவ் மார்ஷ், பத்திரிகையாளர் (Steve Marsh, Art Editor at the BBC Sky at Night Magazine)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *