விஞ்ஞானிகள்

உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இந்த தரவுகள் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலை ஆய்வாளர்களின் சிறப்பு நிபுணத்துவத்துடன் அவர்கள் இதுவரை சமர்ப்பித்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக்காக கொடுக்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வாளர்கள் தங்கள் முதல் மற்றும் இறுதி ஆய்வறிக்கைகளை எப்பொழுது சமர்ப்பித்தார்கள் என்பது குறித்தான தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

பட்டியலில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள்

இப்பட்டியலில் 36 பேராசிரியர்களுடன் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரி(IIT-Indian Institute of technology) முன்னிலையில் உள்ளது. விண்வெளி மற்றும் வானூர்தி, உயிர் மருத்துவ பொறியியல், கட்டிடம் மற்றும் கட்டுமானம், இரசாயன பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல்,சுற்றுச்சூழல் பொறியியல், தொழில்துறை பொறியியல் மற்றும் ஆட்டோமொபைல், இயந்திர பொறியியல் மற்றும் பரிமாற்றம், மருத்துவ மற்றும் உயிர் மூலக்கூறு வேதியியல், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், வலையமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு, உடல் வேதியியல, மின் மற்றும் மின்னணு பொறியியல் போன்று இன்னும் பல்வேறு துறைகளில் ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

பட்டியலில் மேலும் திருச்சியில் உள்ள  என்.ஐ.டி (NIT-National institute of technology) தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 7 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள மாநில அரசின் பல்கலைக்கழகங்கள்

மாநில அரசினால் நடத்தப்படும் பல பல்கலைக்கழகங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முதலிய பல்கலைக்கழகங்களில் தலா 2 பேராசிரியர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

மேலும் பெரியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தலா ஒரு பேராசிரியர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு கல்லூரி பேராசிரியர்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசு கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் இப்பட்டியலில் இடம்பெற்று சிறப்பித்துள்ளார். டாக்டர் அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆற்றல் துறையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் புஷ்பவனம் மாலதி அவர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்கள்

இப்பட்டியலில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இடம்பெற்றுள்ளன.

பாரத் உயர்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேராசிரியர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை வளாகத்தில் செயல்படும் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தையும் சேர்த்து தலா 3 பேராசிரியர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். போரூரில் செயல்படும் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமிர்தா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தலா ஒரு பேராசிரியர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியைச் (CMC) சேர்ந்த எட்டு ஆய்வாளர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கனிம மற்றும் அணு வேதியியல் பிரிவில் ஆய்வு செய்த லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

கண் மருத்துவமனைகளான சங்கரா நேத்ராலயா மற்றும் அரவிந்தர் கண் மருத்துவ அமைப்பை சேர்ந்த தலா ஒரு ஆய்வாளர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதுபோக பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து ஆய்வாளர்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

நன்றி: தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *