released hindutva criminals

மோடி ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்யப்பட்ட இவர்கள் யார்?

ஒரு பக்கம் மனித உரிமைக்காக போராடுபவர்களை கொடும் வழக்குகளில் சிறையில் தள்ளுவது, மறுபுறம் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது, இதுவே இங்கு பாஜக-வின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) சிறையில் அடைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சங்பரிவார் அமைப்புகளின் குற்றங்கள் குறித்தும், மோடி அரசின் கொள்கைத் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்புபவர்கள் தொடர்ந்து  காவல்துறையின் அடக்குமுறைக்கு உள்ளாவது நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு அசாம் மாநிலத்தின் விவசாய சங்கத் தலைவர் முடக்கப்பட்டார். அவர் மீது அக்கொடுமையான சட்டம் பாய்வதற்கு அரசு சொன்ன காரணம், அவர் அனைவரையும் தோழர் என்று அழைக்கிறார், லெனின் புகைப்படத்தைத் தனது முகநூலில் பதிவிட்டு செவ்வணக்கம் கூறினார் என்பது தான். 

அதேபோல் டெல்லி CAA போராட்டத்தில் கலந்து கொண்ட நடாஷா, தேவங்கனா, சஃபூரா சர்கர் என்ற மூன்று மாணவிகள் மீது UAPA எனும் கொடிய சட்டம் பாய்ந்துள்ளது. 

இந்தியாவின் முக்கியமான அறிவுஜீவிகளான வரவர ராவ், ஷோமா சென், ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், கவுதம் நவ்லகா, ஆனந்த் டெல்டும்டே போன்றோர் இந்த தேசத்திற்கு அச்சுறுத்தலானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

2019-ம் ஆண்டு UAPA சட்டத்தின் பிரிவு 35 மற்றும் 36-ல் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தத்தில் அமைப்புகள் மட்டுமல்லாது, தனி நபர்களையும் தீவிரவாதி என்ற முத்திரை குத்தி தடை செய்யலாம் என்று மாற்றியமைக்கப்பட்டது. இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பாஜக அரசை எதிர்த்து விமர்சிப்பவர்களை கைது செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் பாஜக அரசு தனக்கு சாதகமான இந்துத்துவா குற்றவாளிகளை விடுதலை செய்து வருகிறது.

பல்வேறு தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த தீவிரவாதிகளை பாஜக அரசு விடுதலை  செயதுள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக விடப்படுதலும், சமூக அக்கறை கொண்டவர்கள் குற்றவாளியாக்கப்படுவதும் இன்றைய இந்தியாவில் வாடிக்கையாகி விட்டது.      

மாயா கோட்டானி

C:\Users\Admin\Desktop\674214-maya-kodnani-afp.jpg

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த நரோடா பாட்டியா கலவரத்தில் ஏறத்தாழ 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 36 பெண்கள் 35 குழந்தைகள் உள்ளடக்கம். இந்த கலவரத்தில் மிக முக்கியமான பங்காற்றியவர் மாயா கோட்டானி. இவர் 2007-ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்போதுதான் அவர் கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நரோடா பாட்டியா கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது பஜ்ரங் தள் எனும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு. இந்த கலவரத்தை திட்டமிட்டு வடிவமைத்து நடத்தியதில் மாயா கோட்டானி முக்கியமானவர். அந்த கலவரம் நடந்த நாட்களில் களத்தில் துப்பாக்கியுடன் அவர் இருந்த வீடியோ ஆதாரங்கள் நிதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நரோடா பாட்டியா கலவரத்தில் இவருக்கு பங்கிருந்தது என்பதை நானாவதி மேதா ஆணையம் நிருபித்தது. அதன்அடிப்படையில் அவருக்கு 2012ம் ஆண்டு அவருக்கு 28 சிறைதண்டனை வழங்கப்பட்டது. 

முந்தைய காலங்களில் அவரை  சிறையில் இருந்து மீட்டெடுக்க பாஜக-வால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது முடியவில்லை. பின்னர் ஒன்றிய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2018-ம் ஆண்டு அவர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார்.

டி.ஜி வன்சாரா

C:\Users\Admin\Desktop\2.PNG

டி.ஜி வன்சாரா குஜராத்தில் 2004-ம் ஆண்டு சோராபுதீன் உட்பட  6 பேரை போலி என்கவுண்டரில் கொலை செய்த வழக்கிற்காக 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நிகழ்ந்த போலி என்கவுண்டர் அது. அந்த என்கவுண்டர் குஜராத்தின் அன்றைய துணை ஐ.ஜி-யான வன்சாராவின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு  சதிச்செயல் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

அவருடன் சேர்த்து அந்த கொலையில் பங்கெடுத்த 32 காவலர்களும், 6 ஐபிஸ் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த சதிக்கும் தலைமையேற்று நடத்திய வன்சாரா மோடி ஆட்சிக்கு வந்தவுடன் 2017-ம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சாமியார் அசீமானந்தா

C:\Users\Admin\Desktop\unnamed.jpg

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பாளரான சாமியார் ஆசிமானந்தா மற்றும் அவரது மூன்று சீடர்களும்  2007-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அந்த குண்டுவெடிப்பில் 70 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் 2007-ம் ஆண்டு நிகழ்ந்த ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு மற்றும் ஐதராபாத் மசூதி குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் நேரடியாக துறவி அசீமானந்தா சம்மந்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மோடி அரசு ஆடசிக்கு வந்த அடுத்த ஆண்டு அவருக்கு பிணை வழங்கியது. பின்னர் 2019 மார்ச் மாதத்தில் அவரை அனைத்து குற்றங்களில் இருந்தும் பாஜக அரசு விடுவித்துவிட்டது.

பிரக்யா தாக்கூர்

C:\Users\Admin\Desktop\4.PNG

2008-ம் ஆண்டு மகராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் எனும் இடத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடந்தது. அதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டதாக  பிரக்யா தாக்கூர்  எனும் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரக்யா தாக்கூர் தனது வாகனத்தை குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தியதை மும்பையில் தீவிரவாத தடுப்புப் படைப் பிரிவு கண்டுபிடித்தது. அதேபோல் அந்த குண்டுவெடிப்பு சம்பவம் 2006-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இசுலாமியர்களை பழிவாங்கும் எண்ணத்தில் திட்டமிட்டதை உறுதி செய்தது. சிறையில் இருந்த பிரக்யா தாக்கூர் 2017-ம் ஆண்டு மோடி அரசால் பிணையில் விடப்பட்டார். பின் இவர் 2019-ம் ஆண்டு பாஜக சார்பாக போபால் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரை பாஜக அரசு பாதுகாப்புத் துறையின்  பாராளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக நியமித்தது. பாராளுமன்றத்தில் காந்தியைக் கொன்ற கோட்சே தீவிரமான தேசப்பற்றாளர் என்று பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. அதனால் பாராளுமன்ற நிலைகுழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

லீதுல் கோகி 

2017-ம் ஆண்டு காஷ்மீரில் பரூக்தர் என்ற இஸ்லாமியரை மனித கேடயமாக பயன்படுத்திய மேஜர் லீதுல் கோகி மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்த குறறம் முறையாக விசாரிக்கப்படாமல், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னாள் ஆயுதப் படை சிறப்பு அதிகாரம் சரத்து 21-ன் படியும் ராணுவ சட்டம் பிரிவு 63 மற்றும் 69-ன் படியும் (Armed Forces (Special Powers) Act (AFSPA), Article 21 of the Constitution and Sections 63 and 69 of the Army Act read in conjunction with the Indian Penal Code) மேஜர் லீதுல் கோகி ஒரு குற்றவாளி என்று ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி H.S.பங்கா குறிப்பிடுகிறார். அதற்கு பதிலாக அவருக்கு பாஜக அரசு விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

மிலிந்த் எக்போடே

2018-ம் ஆணடு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த இந்துத்துவா தலைவர் மிலிந்த் எக்போடே பீமா கொரேகான் நிகழ்வு குறித்து தலித் மக்களை இழிவுபடுத்திப் பேசி கலவரத்தினை தூண்டிவிட்டார். அதில் ஒருவர் கொல்லப்பட்டார்.  நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். இதுபோன்று பல்வேறு குற்றங்களில் பங்கெடுத்த மிலிந்த் எக்போடே  கைது செய்யப்பட்டு ஒரே வாரத்தில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது நிலுவையில் இருந்த 6 வழக்குகளில் இருந்து பாஜக அரசு அவரை விடுதலை செய்தது. இதில் அபத்தமான விடயம் என்னவென்றால் பீமாகொரேகான் கலவரத்தை தூண்டிய மிலிந்த் எக்போடே-வை விடுதலை செய்துவிட்டு, 11 மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய்வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது. 

கபில் பைசாலா

C:\Users\Admin\Desktop\Capture2.PNG

அதேபோல் கடந்த பிப்ரவரிமாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இந்துத்துவா சக்திகள் தாக்குதல் நடத்தினர். இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். அந்த கலவரத்தின் போது, கபில் பைசாலா என்னும் நபர் கையில் துப்பாக்கியுடன் ஷாகின்பாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டார். டெல்லி காவல்துறையின் முன்னிலையில் இரண்டு முறை, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ”ஜெய்ஸ்ரீராம், இந்தியாவை இந்துக்கள்தான் ஆளவேண்டும்” என்று கத்திக்கொண்டு நடு ரோட்டில் ஓடிய புகைப்படமும், வீடியோவும் நாடு முழுவதும் பரவியது. கபில் பைசாலா கைது செய்யப்பட்டு ஒரு மாதத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேபோல் டெல்லி கலவரத்திற்கு ஆயுதங்கள் வழங்கிய ஆயுத இடைத்தரகர் மனிஷ் சிரோகி  கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களும், அதில் நேரடியாக பங்கு வகித்தவர்கள் மீதும் IPC 336, 506 போன்று எளிமையாக பிணை கிடைக்கும் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதியப்படுகிறது. ஆனால் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகப் போராடிய மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரான நடாஷா நர்வாள், தேவங்கனா கலிதா, சஃபூரா சர்கர் போன்றோர் மீது மிகக்கொடிய UAPA சட்டம் பாய்ந்துள்ளது.

பல்வேறு கலவரங்களுக்கு துணைநின்ற, குறிப்பாக இஸ்லாமியர் மீது வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட காவி குற்றவாளிகள் மீது மோடி அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்து வருகிறது. அதேபோல் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட காவி தீவிரவாத தலைவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். மோடி ஆட்சியின் எதேச்சதிகாரப்போக்கும், பாசிசத் தன்மையும் குற்றவாளிகளை பாதுகாக்கிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்களை ஒடுக்குகிறது.

எங்கே போகிறது நாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *