விடுதலை சிறுத்தைகள்

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும், குறிப்பாக பெண்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதும், வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏராளமான பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருடன் போராட்டத்தில் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத் தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்று மனுதர்மம் சொல்வதாகவும், அதனால்தான் 1927-ம் ஆண்டிலேயே புரட்சியாளர் அம்பேத்கர் அதைத் தீயிட்டு கொளுத்தினார். அதைப் போலவே தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைத்திட முயற்சிப்பதாகவும், அதனால்தான் சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பெருகுகின்றன. BC, MBC மற்றும் SC/ST மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா? என்று கேள்வியெழுப்பி, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குகின்ற மனுஸ்மிருதியை தடைசெய்ய வேண்டும் என்று போராட்டத்தை அறிவித்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்த இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னையில் திருமாவளவன் ஆற்றிய உரை:

https://twitter.com/gavastk/status/1319978588565721088/

திருச்சி:

சேலம்:

https://www.facebook.com/manikandan.mapa/posts/1325492757837342

https://www.facebook.com/100003146455488/videos/3371652299616285/

மதுரை:

கடலூர்:

குடியாத்தம்:

https://www.facebook.com/watchparty/405568317113193/

விருதாச்சலம்:

https://www.facebook.com/beejay.jay.338/posts/791530398310295

கோவை:

https://www.facebook.com/kovai.perarivalan/posts/2887845584834471

செய்யாறு:

மறைமலை நகர்:

மனுதர்மத்திற்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் இந்துத்துவ அமைப்புகளால் பரப்பப்பட்ட வீடியோ ஒன்றினை முன்னிறுத்தி திருமாவளவன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. திருமாவளவன் மீது வழக்கு பதியப்பட்டதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *