காலை செய்தித் தொகுப்பு:தமிழக தேர்தல் முக்கிய ஆலோசனை,தாமிரபரணியில் வெள்ளம் உள்ளிட்ட 8 செய்திகள்

1)தொழிலாளர்கள் போராட்டம்

துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணியை தனியாருக்கு தரும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபிச்செட்டிபாளையத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 200 தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2)தமிழ் நாட்டில் கோரானா

தமிழகத்தில் நேற்று 1 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 06 891 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுபரவியவர்களில் நேற்று  1 198 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 85 315 ஆக உயர்ந்துள்ளது.

கோரானா தாக்குதலுக்கு நேற்று 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

3)காஸ்மீரில் நிலநடுக்கம்

 காஷ்மீரில் இன்று காலை 8.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் குறித்து விவரங்கள் இன்னும் கணக்கிட படவில்லை

4)இறால் பண்ணைகளுக்கு எதிராக போராட்டம்

கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகேயுள்ள கானத்தூர் கிராமத்தில் வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு இறால் பண்ணைகள் அமைத்து வருகின்றனர். இந்த பண்ணைகளில் இறால்களுக்கு ரசாயனம் கலந்த தீனி போடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகின்றது. இதனால், அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால், இறால் பண்ணைகளை அகற்றக்கோரி வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும், பண்ணைகளை அதிகாரிகள் அகற்றாததால் அதனை கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று இறால் பண்ணைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5)தாமிரபரணியில் வெள்ளம் 

  தொடர் மழையால் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. இதேபோன்று சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பாபநாசம் அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. அணைக்கு வினாடிக்கு 2,785 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,836 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணைக்கு வினாடிக்கு 441 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 512 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் நேற்று 108 அடியை எட்டியது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,165 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

பிரதான கால்வாயில் வினாடிக்கு 445 கன அடி தண்ணீரும், பெருங்காலில் 35 கன அடி தண்ணீரும் பாசனத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆங்காங்கே காட்டாறுகள், ஓடைகள் மூலமும் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் கலக்கிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

6)தமிழக தேர்தல் முக்கிய ஆலோசனை

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் பிரதான செயலாளா் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு சென்னை வருகிறது. இந்தக் குழுவில், தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிகாா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எச்.ஆா்.ஸ்ரீனிவாசா, தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலே மாலிக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசிக்கிறது. இதைத் தொடா்ந்து, பிற்பகல் 2.30 மணியளவில் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளா்களுடன் காணொலி வழியாக அவா்கள் ஆலோசனை நடத்த  உள்ளனா்.

7)தமிழக தொழிலாளர்கள் கைது

தமிழகத்தை சேர்ந்த தொழிலாளிகள் 10 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களால் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம்  இருந்து அத்தியாவசிய உணவு பொருள்களை மட்டுமே  பறிமுதல் செய்தனர்.  அவர்களிடம் செம்மர துண்டுகள் எதுவும் இல்லை அதேபோல மரம் வெட்டுகிற  போதும் கைது செய்யபட்டவில்லை 

 அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையின் போது தெரிய வந்தது. 

கடந்த 2 நாட்களுக்கு முன் இதேபோல் வடமாள்பேட்டை பகுதியில் 25 தமிழக தொழிலாளிகளை கைதுசெய்துள்ளனர் , அவர்கள் தற்போது இம்மாதம் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளனர்.

8)தென் தமிழகத்தில் மழை

வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

கன்யாகுமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். மாலத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *