கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்கள் சார்ந்து ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் எந்த போராட்டத்திலும் பங்கேற்காத பாஜக, இந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளது என்பதையும், பாஜகவின் அந்த போராட்டங்களின் காரணமாக அதே காலகட்டங்களில் நடந்து கொண்டிருந்த எந்தெந்த போராட்டங்கள் விவாதமற்றுப் போயின என்பதையும் பார்க்கலாம்.
பாஜக மற்றும் காவி அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்
- வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக போராட்டம்!
- நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்தியதாக போராட்டம்!
- சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக போராட்டம்!
- நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக போராட்டம்!
- நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக போராட்டம்!
- நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக போராட்டம்!
- கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக போராட்டம்!
- நெல்லை கண்ணன் பேச்சு மனதைப் புண்படுத்தியதாக போராட்டம்!
- திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் சர்ச்சை!
- பெரியார் சிலையை உடைப்போம் என்ற சர்ச்சைகள்!
- பெரியார் சிலைகளை சேதப்படுத்துதல், சேதப்படுத்திய நபருக்கு நிதி அளித்தல்!
- தலைவர்களின் சிலைக்கு காவி அடையாளம் பூசும் சர்ச்சைகள்!
- திருமாவளவன் மனுஸ்மிருதியையும், பெண்களையும் தவறாக பேசியதாக வீடியோவை வெட்டி ஒட்டி பரப்பி போராட்டம்!
இதுபோன்று மாதம் ஒரு முறையாவது யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று மக்களின் கவனத்தை அந்த விடயத்தை நோக்கி திருப்புகிறது பாஜக. ஊடகங்களும் இதை விவாதமாக்குகின்றன.
இதன் காரணமாக அந்த காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தும், மாநில உரிமைகள் சார்ந்தும் பல மக்கள் போராட்டங்கள் விவாதங்கள் இன்றி நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. ’மனதை புண்படுத்திவிட்டார்கள்’ எனும் போராட்டத்தை பாஜக தொடர் யுக்தியாக பயன்படுத்தி வருகிறது.
விவாதமில்லாமல் ஆக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள்
- மைனஸ் அளவிற்கு சென்ற GDP மற்றும் பொருளாதார வீழ்ச்சி
- புதிய விவசாய சட்டங்கள்
- புதிய மீன்பிடி கொள்கை
- புதிய கல்விக் கொள்கை
- மாநிலங்களின் அதிகாரங்கள் பறிப்பு
- அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்தல்
- மாநிலங்களுக்கு GST இழப்பீடு பணத்தை அளிக்காதது
- கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட தொழிலாளர்கள்
- நீட் தேர்வு மற்றும் மாணவர் தற்கொலைகள்
- மருத்துவப் படிப்பில் OBC இட ஒதுக்கீடு பறிப்பு
- அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வு
- 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை மற்றும் வேலை இழப்புகள்
- பணமதிப்பிழப்பு தோல்வி
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை
- பெட்ரோல், டீசல் விலையுயர்வு
- கேஸ் சிலிண்டர் விலையுயர்வு
- எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்
- காவிரி மேலாண்மை வாரியத்தில் உரிமை பறிப்பு
- 2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA 2020)
- ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு
- தமிழகப் பணியில் வட இந்தியர்கள் நியமனம்
- இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு
- குடியுரிமை திருத்தச் சட்டம்
- டெல்டா பகுதி மீத்தேன் மற்றும் எரிவாயு விவகாரம்
- ஆதிச்சநல்லூர், கீழடி தொல்லியல் ஆய்வுகள்
இன்னும் பல மக்கள் போராட்டங்களின் விவாதங்கள் மடைமாற்றப்பட்டுள்ளன.
Inputs: நன்றி – சோசியல் மீடியா