அமித்ஷா

டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நியமித்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையை அதிகரித்ததற்கும், பாராபட்சமாக விசாரணை நடத்தப்பட்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.

”பிப்ரவரி 2020-ல் வடகிழக்கு டெல்லியில்  நடந்த வகுப்புவாத வன்முறை” (Communal Violence in North East Delhi, February 2020) என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “வன்முறையை அதிகரிப்பதில் அமித்ஷா-வின் உள்துறை அமைச்சகம் கணிசமான பங்காற்றியுள்ளது”

நடந்தது வன்முறையா? கலவரமா?

அந்த அறிக்கையில், “வகுப்புவாத வன்முறையை டெல்லி கலவரம் என்று வர்ணிப்பது தவறானது. வன்முறையில் இரு தரப்பினரும் சமமாக பங்கேற்கும் சூழ்நிலையை மட்டுமே ‘கலவரம்’ என விவரிக்க முடியும். ஆனால் இங்கு சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதுதான் மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்துத்துவ கும்பல்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற தீவிரமாக இஸ்லாமியர்கள் முயன்றுள்ளனர். இந்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். அதில் 40 பேர் இஸ்லாமியர்கள. ஏறக்குறைய எல்லா பகுதிகளிலும் இந்துத்துவ கும்பல்களுடன் காவல்துறையினர் பக்கபலமாக நின்றதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமித்ஷாவின் ஆதரவு

மேலும் அமித்ஷா குறித்து அவ்வறிக்கை பின்வருமாறு கூறுகிறது. ”டெல்லியில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மார்ச் 11-ம் தேதி அமித்ஷா பாராளுமன்றத்தில் அறிவித்தார். மேலும் நிலைமையைக் கண்காணிப்பதாகவும் கூறினார். ஆனால் வன்முறை தடுக்கப்படவில்லை.  வன்முறை அதிகரித்த பிப்ரவரி 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கவில்லை. மேலும் டெல்லி காவல்துறை மற்றும் அதிரடிப்படை போதாமல் இருந்த போது கலவரத்தை அடக்க இராணுவம் பயன்படுத்தும் நோக்கத்தில் உள்துறை செயல்படவில்லை”. 

பாஜகவினரின் வெறுப்பு பிரச்சாரம்

”துரோகிகளைச் சுடுங்கள், இஸ்லாமியர்கள் இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து கற்பழிக்கவும், கொலை செய்யவும் போகிறார்கள்” என்று பாஜக தலைவர் பேசியதற்கான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அவற்றை உள்துறை  பொருட்படுத்தவில்லை.

“காஷ்மீர் பண்டிட்டுக்களுக்கு நடந்தது, இனி டெல்லியிலும் நடக்கலாம். லட்சக்கணக்கான மக்கள் ஷாஹீன் பாகில் கூடுகிறார்கள். அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் கற்பழித்து கொலை செய்யலாம். எனவே மக்கள் இப்போது என்ன செய்யலாம் என்று முடிவு செய்யயுங்கள்” என்று மேற்கு டெல்லி பாஜக எம்.பி.பர்வேஷ் வர்மா ஜனவரி 28 அன்று பொது வெளியில் பேசுகிறார். இது குறித்தான ஆதராங்களை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு ஆதாரங்கள்  இருந்தபோதும் இவர்களை அமித்ஷா பாதுகாக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை 

பர்வேஷ் வர்மா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா ஆகிய மூவரும் வகுப்புவாதக் கருத்துக்களை பேசியதற்கு தண்டனையாக பல நாட்கள்  டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிர்ச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று  இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்தது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. 

அதேபோல் பிப்ரவரி 21-ம் தேதி சிவராத்திரி ஊர்வலங்களில் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா ஆத்திரமூட்டும் முழக்கங்களை வெளிப்படுத்தியதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

”குடியுரிமை திருத்தச் சட்டம் தவறு என்று உணர்ந்து அமைதியாக தங்களது எதிர்வினையை பதிவு செயபவர்களை, அச்சுறுத்துவதற்கும், அவர்களை ஆதிரமூட்டுவதற்கும், அவர்களை நோக்கி வெறிகொண்டு கத்துவதற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபேரோ இந்த மூவருக்கும் எதிராகக் கூறினார்.

சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்

சிறுபான்மையினர் மீது அதிகமாக FIR போடப்பபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதற்கு ஆதரவாக காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செயல்பட்டுள்ளார் என்று இவ்வறிக்கை கூறுகிறது. 

பாஜக, இந்துதுவா சக்திகள் இந்த வன்முறையை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தும் மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களை காப்பாற்றுகிறது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கோரிக்கை முன்வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *