டூத்பேஸ்ட் நிக்கோட்டின்

உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு மட்டுமல்ல நிக்கோட்டினும் இருக்கு!

இவ்வுலகில் பெரும்பாலானோர் காலைப் பொழுதை பற்பசையோடு தொடங்குகிறோம். பல் துலக்குவதற்காகத்தான் என்றாலும் வாயில் பயன்படுத்துவதால் ஒருவகையில் உணவாகிறது. பல் துலக்கிவிட்டு நீரில் வாயை சுத்தம் செய்தாலும் கூட சிறிதளவு உடல் உள்ளுறுப்புகளாலும், வாய் பகுதியாலும் ஈர்க்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் என்ன இருக்கிற்து என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியம் தானே.

தொலைக்காட்சியில் நாம் ஆர்வமாக ஒரு பாடலோ, படமோ பார்த்துக்கொண்டிருக்கும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு திடீரென  குளிர்சாதன பெட்டியிலிருந்து உடைத்துக்கொண்டு மைக்கோடு வரும் காஜல் அகர்வால் உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கா என்று கேட்பார். 

தொடர்வண்டியில் பயணிக்கும் ஒரு பெண் மசால் வடையை கடிக்க முடியாமல் ஆ..ஆ.. என்று அலறுகிறார். உடனே டி.டி.ஆர்- ஆக வரும் சமந்தா டூத்பேஸ்டில் இருக்கும் உப்பின் ஞானத்தை பற்றி பாடி மெட்டோடு வகுப்பெடுக்கிறார். அவரோடு சேர்ந்து அந்த பெட்டியில் இருக்கும் அனைவரும் ”உப்பின் ஞானம் உப்பின் ஞானம்” என்று கோரஸாக பாடுவார்கள்.டூத்பேஸ்டில் உப்பு இருப்பதை சொன்ன காஜலும் சமந்தாவும் நிக்கோட்டின் இருப்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்.

24 பிராண்டு பற்பசைகளில் நடத்தப்பட்ட ஆய்வு

சிகரெட் புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் நிக்கோட்டின் உள்ளது. அதே பொருள் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பற்பசையில் இருக்கிறது என்றால்…?

ஆம். இது தொடர்பான் ஆய்வு 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தாலும் இன்றும் நம்மில் பயன்பாட்டில் இருக்கும் பொருள் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையிலான இத்தகவலை பகிர்கிறோம்.

2011-ம் ஆண்டு Delhi Institute of Pharmaceutical Sciences and Research (DIPSAR) என்கிற மருந்து ஆய்வு நிறுவனம் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் 24 பிராண்டுகளின் பற்பசைகளை ஆய்வு செய்து வெளியிட்டது. இதில் 7 பிராண்டுகளின் (Colgate Herbal, Himalaya, Neem paste, Neem Tulsi, RA Thermoseal, Sensoform and Stoline) பற்பசைகளில் நிக்கோடின் கலக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டது.

அதேபோல் 10 பிரண்டுகளின் பற்பொடிகளை ஆய்வு செய்தபோது அதில் ஆறு பற்பொடிகளில் ( Dabur Red, Vicco, Musaka Gul, Payokil, Unadent and Alka Dantmanjan ) நிக்கோடின் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வு செய்யப்பட்ட பற்பசைகளில் அதிகப்படியாக கோல்கேட் ஹெர்பல்-லில் 18 மில்லிகிராம்/கிராம் நிக்கோட்டின் அளவும், Neem Tulsi-ல் 10 mg/g நிக்கோடின் அளவும் இருப்பது  கண்டறியப்பட்டது.

பற்பொடிகளில் செய்யப்பட்ட ஆய்வில் அதிகப்படியாக Payokil எனும் பற்பொடியில் 16 mg அளவு நிக்கோடின் இருப்பது கண்டறியப்பட்டது. இது 8 சிகரெட் புகைத்ததற்கு சமம்.

மேலும் இந்த நிறுவனங்களின் தயாரிப்பில் அச்சிட்டுள்ள உட்பொருட்கள் பற்றிய தகவலில் நிக்கோடின் இருப்பைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் இந்த ஆய்வு தெறிவித்தது.

கேன்சரை உண்டாக்கும் நிக்கோட்டினை பற்பசையில் கலப்பது என்பது சட்ட விரோதம். ஆனால் இந்த பெருநிறுவனங்கள் மக்களின் நலம் குறித்தோ சட்டம் குறித்தோ கவலை கொள்வதில்லை.

சிகரெட்டில் உள்ள நிக்கோட்டினும், பற்பசையில் உள்ள நிக்கோட்டினும்

ஒரு சிகரெட்டில் 2 முதல் 3 மில்லி கிராம் நிக்கோட்டின் உள்ளது. அதாவது ஒரு முறை 18 mg அளவு நிக்கோடின் உள்ள பற்பசையால் பல் விளக்கும்போது நாம் 9 சிகரெட் புகைத்ததற்கு சமமாகிறது. ஒவ்வொரு நிறுவனங்களின் பற்பசையைப் பொருத்து நிக்கோட்டின் அளவு அதாவது சிகெரெட்டின் அளவு வேறுபடலாம். ஆனால் பற்பசை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அதிகாலையில் பல் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் ஒன்று முதல் 9 சிகரெட் வரை பயன்படுத்துகிறோம். 

சிலர் ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்பசைகளை பயன்படுத்துகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பல் விளக்க இந்த பற்பசைகளை பயன்படுத்துகின்றனர். இது குழந்தைகளின் பல் மட்டுமல்ல உடல் நலத்திற்கும் தீங்கு.

நாம் பல் விளக்கிவிட்டு துப்பினாலும் இந்த நிக்கோட்டின் நமது செல்களாலும் எச்சில் மூலமாகவும் உறிஞ்சப்படுகிறது.

வழக்கம்போல குற்றம் சாட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆய்வை மறுத்தன. ஒரு வேலை இந்த ஆய்விற்குப் பிறகு இந்நிறுவனங்கள் நிக்கோட்டின் கலப்பை நிறுத்தியிருக்கலாம் அல்லது தொடரலாம். ஆனால் பெருநிறுவனங்கள தனது லாப வெறிக்காக எந்த சட்டங்களையும் மீறும். மக்கள் நலனை புறக்கணித்து லாபம் என்ற குறிக்கோளோடு மட்டுமே செயல்படும்.

ஏன் தயாரிப்பு நிறுவனங்கள் நிக்கோட்டினை பயன்படுத்துகிறது?

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பற்பசையோ/பற்பொடியோ பிடிக்கிறது. அதையே தொடர்ந்து வாங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் தங்களது பற்பசை/பொடிகளில் நிக்கோட்டின் கலப்பது மூலமாக நுகர்வோர்களை ஒரு வித சுவைக்கோ உணர்விற்கோ உள்ளாக்கி தொடர்ந்து தங்களுடைய பொருட்களையோ வாங்கச்செய்கிறது.

இந்த ஆய்வுப் பட்டியலில் நாம் பயன்படுத்தும் நிறுவனத்தில் பெயர் இல்லாமல் இருக்கலாம். மீண்டும் நிக்கோட்டின் இல்லாத டூத்பேஸ்ட் எது என்று தேடி கண்டுபிடித்து வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு நாம் வாழும் பகுதியை சுற்றி கிடைக்கும் பொருட்களான வேப்பங்குச்சி  அல்லது உள்ளூர் தயாரிப்புகளில் கிடைக்கும் தரமான பல்பொடிகளை வாங்கி பயன்படுத்துவதே சிறந்தது. பற்பசையோடு கேன்சர் போன்ற நோய்களையும் இலவசமாக கொடுக்கும் வேதிப்பொருட்கள் கலந்த இந்த பொருட்களைவிட, உள்ளூர் தயாரிப்பினாலான இயற்கை பொருட்களை பயன்படுத்துவது தற்சார்பு வாழ்வியலாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது, பொருளதாரத்திற்கும் நல்லது.

பற்பசை2008-ம் ஆண்டு கண்டறியப்பட்ட நிக்கோட்டின் அளவு (மி.கி/கி)2011-ம் ஆண்டு கண்டறியப்பட்ட நிக்கோட்டின் அளவு (மி.கி/கி)தயாரிப்பாளர்
Vicco0.0020.05Vicco laboratories, Goa
Alkadant manjan1.0Dev Chemical Works Pvt. Ltd., New Delhi
Yunadantnil1.7Aayam Herbal And Research, Jaipur, Rajasthan
Dabur Red5.750.01Dabur India Limited, Solan, Himachal Pradesh
Payo kilnil16Gurukul Kangri Pharmacy, Haridwar, Uttarakhand
Colgate Herbalnil18Colgate Palmolive India Limited, Mumbai, Maharashtra
Neem Tulsinil10Ayur Siddha Limited, Kangra, Himachal Pradesh
Stoline Pastenil0.06Group pharmaceuticals limited, Kolar, Karnataka
Himalayanil0.029Himalaya Drug Company, Bengaluru, Karnataka
Sensoformnil0.065Indoco Remebies Limited, Solan, Himachal Pradesh
நன்றி: https://www.downtoearth.org.in/news/your-toothpaste-may-cause-cancer-34037

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *