தாழப் பறந்திடும் மேகம்

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3

இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகங்களை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2

கனவுகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?

கெட்ட கனவுகளில் இப்படி ஒரு நன்மை இருந்தாலும் அதன் மற்றொரு பகுதி நீளும் கொடுங்கனவுகளாக மாறி நம்மை இம்சிப்பது தொடர்கிறது. ‘கொடுங்கனவுகள் அதன் செயல்முறையில் தடைபடுகிறது’ என்கிறார் டேவிஸ். ஏனெனில் நம் மூளையானது ஒரு உணர்ச்சிமிகுந்த நிகழ்வை தொகுப்பதில் ஈடுபட்டிருக்கிறது அந்த நிகழ்வில் நாம் திடுக்கிட்டு விழித்து எழுவதென்பது அதன் செயல்முறையை பாதிக்கிறது. மேலும் அப்படி திடீரென்று எழுவதால் அதன் முழு தொகுப்பை நாம் காணயியலாது என்கிறார்.

ஒருவர் நீண்டகாலமாக கொடுங்கனவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரின் பழக்கவழக்கங்களும் மாறுகிறது என்கிறார் டேவிஸ். சமீபகாலமாக அவர் கொடுங்கனவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அதிகமாக எதிர்கொள்கிறார். அவர்கள் உண்மையில் அவர்களுக்கு தொடர்ந்து வரும் கொடுங்கனவுகளை பற்றி அதிகமாக கவலைப்படுகின்றனர் அதனால் அவர்கள் தூக்கத்தை தவிர்கின்றனர் அல்லது உறங்கச்செல்லும்போது மிக விரைவாக உறங்க விரும்புகின்றனர். அதற்காக தங்களுக்கு தெரிந்த சுய மருத்துவத்தை இரவுமுழுவதும் மேற்கொள்கின்றனர் என்கிறார் டேவிஸ் .

கனவுகளுக்கு ‘நினைவுகளின்’ பங்கு

கனவில் நினைவுகளை ‘அடக்குதல்’ என்ற கருத்து பிராய்டுக்கு முந்தையது. விரும்பத்தகாத நினைவுகள் மனதால்அடைத்துவைக்கபடலாம் என்று ‘பிராய்ட்’ கூறினார். இந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்த அனுமதிப்பதன் மூலம் கனவுகள் நிகழ்த்தப்படும் அடக்குமுறையை எளிதாக்குகின்றன.

இரண்டு வகையான தற்காலிக விளைவுகள் நினைவுகளில் கனவுகளை இணைப்பதை வகைப்படுத்துகின்றன:

முந்தைய நாள் நிகழ்வுகளை உடனடியாக இணைப்பதை உள்ளடக்கிய நாள்-தற்காலிக விளைவு.

ஒரு வாரம் தாமதமான நினைவுகளை இணைப்பதை உள்ளடக்கியது- குறுகிய விளைவு.

கனவுகளின் நினைவக வகைகள்

இரண்டு வகையான நினைவுகள் ஒரு கனவிற்கான அடிப்படையை உருவாக்குகின்றன. அவை

சுயவரலாற்றின் நினைவுகள் (Autobiographical memories): இந்த வகையான நினைவுகள் ஒருவரின் நீண்டகால சுய நினைவுகளை கனவுகளில் நினைவுபடுத்துகின்றன.

துணைகதை நினைவுகள் (Episodic memories): இந்த வகை நினைவுகள் கனவில் ஒரு  குறிப்பிட்ட நிகழ்வு அல்லது அனுபவத்தின்  பகுதிகளை ஒரு நாடகத்தின் பகுதிபோல நினைவுபடுத்துகின்றன.

கனவுகளின் உள்ளடக்கங்களின் நினைவகங்களை ஆராய நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 32 நபர்கள் பங்கேற்றனர். அதன் முடிவில் நமக்கு வரும் ஒரு கனவில் (0.5% சதவீதம்) துணைகதை நினைவுகளில் இருந்தது கண்டறியப்பட்டது. பெரும்பாலான கனவுகளில் (80 சதவீதம்) சுயவரலாற்றின் நினைவக அம்சங்கள் அக்கனவுடன் குறைந்த மற்றும் மிதமான தொடர்புகளை கொண்டிருந்தன. கனவு காணும்போது உணரப்படும் தனிப்பட்ட அனுபவங்களின் நினைவுகளானது நினைவகங்களிலிருந்து துண்டு துண்டாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டும் கனவுகளில் வருகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயலானது அந்த நினைவுகளை நீண்டகால சுயவரலாற்று நினைவகத்தில் சேமிக்க ஒருங்கிணைக்க எடுக்கப்படும் நிகழ்வாகும்.

கனவுகளின் கருப்பொருள்கள் (Themes)

நம் மனதில் அடக்கப்பட்ட கருத்துக்களுக்கும் கனவின் கருப்பொருளாக மாறக்கூடிய உள்ளடக்கங்களுக்கும் தொடர்புகள் இருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய அடக்கப்பட்ட கருத்துக்கள் கனவுகளில் வருவது அதிகரிக்கிறது

நன்றாக உறங்கும் வழக்கத்தை கொண்ட 15 நபர்களை வைத்து ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் உறங்கச்செல்லும் ஐந்து நிமிடங்களுக்கு முன் சில தேவையற்ற சிந்தனைகளை மனதில் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முடிவில் அன்றைய இரவில் அவர்களுக்கு வந்த கனவுகளின்  பெரும்பகுதியில் அவர்கள் கட்டுப்படுத்திய சிந்தனைகளும், துன்பமான கனவுகளுமே வந்தன. இந்த ஆய்வில்  சிந்தனை கட்டுப்பாடானது அதை கட்டுப்படுத்தும் மக்களுக்கு கணிசமான அளவில் மனநல கோளாறுகளின் அறிகுறிகளை ஏற்படுத்துவதை காணமுடிந்தது. உறக்கத்தில் உருவாகும் வெளிப்புற தூண்டுதல்கள் அன்றைய கனவுகளின் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்கத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக ரோஜா மலர்களை வைத்து ஏற்படுத்திய நிறமுள்ள, நேர்மறையான தூண்டுதல்கள் கனவில்  மிகவும் நேர்மறையான கருப்பொருள் கொண்ட கனவுகளை அளித்தது. அதே நேரத்தில் அழுகிய முட்டைகள் மற்றும் அதன் நாற்றத்தை வைத்து ஏற்படுத்திய எதிர்மறை தூண்டுதல்களில் தொடர்ந்து எதிர்மறையான கருப்பொருள் கனவுகளை ஏற்படுத்தின.

இந்த ஆய்வுகளில் ஒன்று உறுதியாக சொல்ல முடிந்தது, மக்கள் தொகையில் அதிக சதவீதத்தினர் ஒரே மாதிரியான கருப்பொருள்களை கொண்ட கனவுகளை காண்கிறார்கள். இதைப்பற்றி வழக்கமான கனவு கருப்பொருள்களின் அதிர்வெண்கள் மற்றும் அதற்குரிய பல்வேறு ஆய்வு கேள்விகள் அடங்கிய பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 55 வழக்கமான கனவு கருப்பொருள்களின் தரவரிசையானது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தொகுப்புகளில் நிலையானதாக இருப்பதை உறுதிசெய்துள்ளன.

அப்படி அடையாளம் காணப்பட்ட பொதுவான கனவுகளின் 55 கருப்பொருள்கள்

1.பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் படிப்பு 

2. துரத்தப்படுவது அல்லது பின்தொடர்வது 

3.பாலியல் அனுபவங்கள் 

4.உயரத்திலிருந்து விழுவது 

5 தாமதமாக வருவது 

6.உயிருள்ள நபர் இறப்பதாக காண்பது 

7. இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக காண்பது 

8.பறப்பது அல்லது பலமான காற்றில் உயருவது 

9. தேர்வில் தோல்வியடைவது 

10. கீழே விழுவதற்காக எதாவது உயரத்தின் விளிம்பில் நிற்பது 

11.பயத்தில்  உறைந்திருக்கும் நிலை 

12.உடல் ரீதியாக தாக்கப்படுவது 

13.நிர்வாணமாக இருப்பது 

14.சுவையான உணவை உண்ணுவது 

15.நீச்சலடிப்பது 

16.பூட்டப்பட்டிருப்பது 

17.பூச்சிகள் அல்லது சிலந்திகள் 

18. கொல்லப்படுதல்

19.பற்களை இழத்தல் 

20.கட்டப்பட்டிருத்தல் அல்லது நகர முடியாதநிலை 

21.வினோத முறையில் உடையணிந்திருப்பது 

22.மழலை பருவத்தில் இருப்பது 

23.ஒரு பணியை வெற்றிகரமாக முடிக்க முயற்சிப்பது 

24. கழிவறையை கண்டுபிடித்தல் 

25.வீட்டில் ஒரு புதிய அறையை கண்டுபிடிப்பது 

26. அதிக அறிவாற்றல்  அல்லது மனதிடம் கொண்டவர் 

27.ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது 

28. நெருப்பு 

29. நெருங்கயியலாத காட்டு மிருகங்கள் 

30. மிக நெருக்கமாக ஒருவரின் முகத்தை காண்பது 

31.பாம்புகள் 

32.மந்திர சக்திகள் கொண்டவர்கள்  

33.தெளிவாக உணர்வது அதில் ஒருவரின் இருப்பைப் பார்ப்பது அல்லது கேட்பது அவசியமில்லை 

34.பணத்தை கண்டுபிடிப்பது 

35.வெள்ளம் அல்லது பேரலைகள் 

36.ஒருவரைக் கொல்வது

37.தன்னையே இறந்தவராக காண்பது 

38. பாதி உறக்கத்திலிருந்து எழுந்து படுக்கையிலேயே முடங்குவது 

39. அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொள்ளும் மக்கள் 

40. உங்களை ஒரு கண்ணாடியில் பார்ப்பது 

41.எதிர்பாலினமாக காண்பது 

42. மூச்சுத்திணறுவது ,சுவாசிக்கமுடியாத நிலை 

43.ஏதோ ஒரு வடிவத்தில் கடவுளை எதிர்கொள்வது 

44.ஒரு பறக்கும் பொருளின் விபத்து 

45. பூகம்பங்கள் 

46. ஒரு தேவதையைப் பார்ப்பது 

47. பாதி மனிதஉருவிலும், பாதி விலங்கு உருவத்திலும் இருக்கும் வினோத உருவங்களைக் காண்பது 

48.சூறாவளி அல்லது  பலமான காற்று வீசுதல் 

49. திரைப்படத்தில் வருவது 

50. மாறுபட்ட நிலப்பரப்புகளைக் காண்பது 

51. வெளிகிரகத்திற்கு பயணிப்பது 

52.ஏதேனும் ஒரு விலங்கு 

53. வேற்றுகிரகத்து பறக்கும் பொருள்களை காணுதல் 

54. யாரையேனும் கருக்கலைப்பு செய்தவராக காணுதல் 

55.ஏதேனும் ஒரு பொருள்

சில கனவு கருப்பொருட்கள் காலப்போக்கில் மாறுகின்றன. உதாரணமாக 1956 முதல் 2000 வரை கனவுகளில் பறப்பதாகக் கூறும் மக்களின் எண்ணிக்கை அதிக சதவிகிதத்தில் இருந்தது. அப்போது அதிகமான மக்கள் அதிக முறை விமானப் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கனவுகள் எதை பிரதிபலிக்கின்றன?

உறவுகள்: ஆபத்தில் உள்ள ஒரு பொருள், வீழ்ச்சி அல்லது துரத்தப்படுவது உள்ளிட்ட சில கனவுகளின் வகைகள் உறவுகளில் ஏற்பட்டிருக்கும் மோதல்களுடன் தொடர்புடையது என்று சிலர் கருதுகின்றனர்.

பாலியல் கருத்துக்கள்: பறப்பது, பாலியல் அனுபவங்கள், பணத்தைக் கண்டுபிடிப்பது மற்றும் சுவையான உணவை உண்ணுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய கனவுகளின் வகைகள் பாலுணர்ச்சி உந்துதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

சங்கடம் மற்றும் பயம்: நிர்வாணமாக இருப்பது, தேர்வில் தோல்வி, தாமதமாக வருவது, பற்களை இழப்பது, தகாத முறையில் ஆடை அணிவது போன்ற கனவுகள் சமூகதின் மேலுள்ள அக்கறை மற்றும் சங்கடத்துடன் கூடிய பயத்துடன் தொடர்புடையது.

மூளையின் செயல்பாடு மற்றும் கனவுகளின் வகைகள்

REM நிலையின் உறக்கத்தின்போது போது மூளை செயல்பாடு குறித்த நியூரோ இமேஜிங் ஆய்வுகளில், அந்த நிலையில் மூளையின் செயல்பாடானது குறிப்பிட்ட கனவை வெளிப்படுத்தும் செயலோடு  இணைக்கப்படலாம் என்று கண்டறிந்தனர்.

ஒருவர்க்கு ஏற்படும் மூளை பாதிப்பிற்கு பின் அவர் காணும் கனவுகள் வினோத அம்சங்களுடன் இருக்கலாம். அவர்களுக்கு கனவில் வெளிப்படும்  உணர்ச்சி, முகங்கள், இடங்கள் ஆகியவற்றை தவறாக ஒன்றுக்கொன்று மாறுபாடான வகையில் இணைக்கப்பட்டு வெளிப்படலாம்.

கனவுகள் மற்றும் புலன்கள்

பல்வேறு வகையான தலைவலியால் அவதிப்படும் நபர்களின் கனவுகள் ஆய்வுக்காக மதிப்பீடு செய்யப்பட்டன. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு சுவை மற்றும் வாசனை தொடர்பான கனவுகளின் அதிர்வெண் அதிகரித்திருப்பதை முடிவுகள் காண்பித்தன.

‘அமிக்டாலா’ மற்றும் ‘ஹைபோதாலமஸ்’ போன்ற சில பெருமூளை கட்டமைப்புகளின் பங்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணமாக இருக்கின்றன.கனவுகள் பற்றிய ஆய்வில் மேற்சொன்ன மூளைகளின் கட்டமைப்புகள் அவர்களின் உறக்கம் மற்றும் கனவுகள் பற்றிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

இசை பற்றிய கருப்பொருள்கள் கனவுகளில் மிக அரிதாகவே வெளிப்படுகின்றன. இருப்பினும் 35 தொழில்முறை இசைக்கலைஞர்கள் மற்றும் 30 இசையோடு தொடர்பில்லாத சாதாரண நபர்களை வைத்து தொடர்ந்த ஆய்வில், இசைக்கலைஞர்கள், சாதாரண நபர்களைவிட  அதிக இசை தொடர்பான கனவுகளை கண்டிருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் சில சுவாரசியமான முடிவுகள் வெளிப்பட்டன. அதாவது ஒருவரின் இசை பற்றிய கனவுகளில் வெளிப்படும் அதிர்வெண் அவர்கள் எப்போது இசையை கற்றுக்கொள்ள தொடங்கினார்களோ அந்த வயதுடன் தொடர்புடையது என்றும் மாறாக ஒருவர் தினந்தோறும் நினைவில் சேகரிக்கும் இசை பற்றிய தகவல்களுக்கும் இசை கனவுகளுக்கும் எந்தவித தொடர்புமில்லை என தெரியவந்தது. அவர்கள் கண்ட இசை கனவுகளை மீண்டும் நினைவுபடுத்தும்போது வெளிப்பட்ட இசையில் பாதிக்குமேல் தரமற்று இருந்தன. இந்த முடிவுகள் ஒரு அசலான இசையை கனவுகளால் உருவாக்கப்படலாம் என்பதை நிரூபித்தன.

கனவுகளில் வலி உணர்ச்சி

உண்மையான மற்றும் உடலுறுப்புகளால் உருவாக்கப்படும் வலி உணர்ச்சிகள் கனவுகளில் வெளிப்படலாம்.இவை நேரடியான வலி ஏற்படும் உடலுறுப்புகளாலோ அல்லது வலி பற்றிய நினைவுகள் தூண்டப்படுவதாலோ ஏற்படலாம். ஆனால் இத்தகைய கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மற்றும் கனவுகளின் அதிர்வெண்கள் மிக குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆய்வில் தீக்காயங்களுக்கு ஆளான 28 நோயாளிகளை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் வாரத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு அவர்கள் கண்ட கனவினை பதிவுசெய்தனர். இந்த ஆய்வின் முடிவுகளில்

39% சதவிகித நோயாளிகள் வலி உணர்வினை கொண்ட கனவினை கண்டதாக பதிவுசெய்தனர்.

வலி உணர்வினை கண்டவர்களில் அவர்கள் கண்ட மொத்த கனவுகளில் 30% சதவீதம் வலி உணர்ச்சி தொடர்பானவை.

வலி உணர்ச்சி கனவுகள் கண்ட நோயாளிகளுக்கு குறைவான தூக்கம், கொடுங்கனவுகள் மற்றும் சிகிச்சைக்காக ஆன்சியோலிடிக் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டது மற்றும் தீக்காயங்களின் அளவு ஆகியவை காரணங்களாகவும் இருந்தன.

வலி உணர்ச்சிகொண்ட கனவுகளை கண்ட நோயாளிகள் சிகிச்சையின்போது அதிக வலியை உணர்ந்ததாக கூறினார்.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வலி உணர்ச்சி கொண்ட கனவுகளைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. இருப்பினும், சாதாரண நபர்களுக்கு வரும் வலி உணர்ச்சி கொண்ட கனவின் அதிர்வெண்ணானது நோய் பாதித்தவர்களின் வலியுணர்ச்சி கொண்ட கனவின் அதிர்வெண்ணை காட்டிலும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கனவில் தன்னுணர்வு

ஒரு மருத்துவ ஆய்வில் மூளை மடிப்புகளின் ஒரு பகுதியான Fronttemporal பகுதியில் ஏற்படும் மூளைமின்அலைவரைவின் (Electroencephalogram -EEG) செயல்பாடுகள் கனவுகளில் தன்னுணர்வு பெறக்கூடிய   விழிப்பு நிலையை ஏற்படுத்துவதாக கூறுகின்றன.

REM உறக்கநிலையில் குறைந்தளவிலான காமா அலைகளின் செயல்பாடுகள் மூளையின் செயல்பாட்டினை தூண்டி கனவுகளில் தன்னுணர்வு பெரும் நிலையை ஏற்படுத்துகின்றன. இந்த உணர்வு 25 மற்றும் 40 ஹெர்ட்ஸ் மதிப்புள்ள அலைவுகளுடன் தொடர்புடையது என்று ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

தொடரும்…

அடுத்த பாகம் விரைவில் வெளிவரும்.

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *