Corona vaccine

கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?

உலகம் முழுதும் கொரோனாவுக்கான தடுப்பூசியினைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவ ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ‘கோவாக்சின் (COVAXIN) என்ற தடுப்பூசிக்கான சோதனைப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த தடுப்பூசி ஆகஸ்ட் 15 அன்று மூன்று கட்ட சோதனைகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்தது. 

மூன்று கட்ட சோதனைகளை முடிப்பதற்கு பல மாதங்கள் தொடங்கி வருடம் வரை ஆகலாம் என்றும், முதல்கட்ட சோதனை கூட இன்னும் நடைபெறாத நிலையில், சோதனைகளை அவசரமாக முடிப்பது அறிவியலுக்கே எதிரானது என்றும் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது ஆகஸ்ட்-15 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி எந்த நிலையில் இருக்கிறது? எத்தனை சோதனைக் கட்டங்கள் முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ஏழு நாடுகளிலிருந்து 16 வகையான தடுப்பூசிகள் ஆரம்ப மருத்துவ ஆராய்ச்சிகள் முடித்து முதல் மூன்று கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்படும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி மட்டும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. அதிகபட்சமாக சீனாவில் 7 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகளும், ஆஸ்திரேலியா, ரஷ்யா, கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு தடுப்பூசியும் சோதனை நிலைகளில் இருக்கின்றன. மற்ற நாடுகளில் தடுப்பூசி தயாரிப்புப் பணி ஆரம்பகட்ட மருத்துவ ஆராய்ச்சி நிலைகளில் இருக்கிறது.

தடுப்பூசிகளின் பட்டியல்:

நாடுதயாரிப்பு நிறுவனம்சோதனை கட்டம்(Phase)
சீனா 1. CanSino Biological Inc./Beijing Institute of Biotechnology Phase 2 and 1
2. Wuhan Institute of Biological Products/Sinopharm Phase 2 and 1
3. Beijing Institute of Biological Products/Sinopharm Phase 2 and 1
4. Sinovac Phase 2 and 1
5. Institute of Medical Biology, Chinese Academy of Medical Sciences Phase 1
6. Anhui Zhifei Longcom Biopharmaceutical / Institute of Microbiology, Chinese Academy of Sciences Phase 1
7. People’s Liberation Army (PLA) Academy of Military Sciences/Walvax Biotech. Phase 1
அமெரிக்கா1. Moderna/NIAID Phase 2 and 1
2. Inovio Pharmaceuticals/ International Vaccine Institute Phase 2 and 1
3. Novavax Phase 2 and 1
இங்கிலாந்து1. University of Oxford/AstraZeneca Phase 3
2. Imperial College London Phase 1
ரஷ்யா Gamaleya Research Institute Phase 1
ஜெர்மனி Curevac Phase 1
ஆஸ்திரேலியாVaxine pty
Jointly with Korean company Medytox
Phase 1
கொரியா Genexine Consortium Phase 1

மூன்று கட்ட சோதனைகள் என்ன?

Phase 1 எனும் முதல்கட்ட சோதனையானது மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான ஆட்களிடம் நடத்தப்படும். தடுப்பூசி அவர்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா, பாதுகாப்பாக இருக்கிறதா என்பதே இந்த கட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Phase 2 எனும் இரண்டாம் கட்ட சோதனையில் அதிக நபர்களுக்கு அளித்து பரிசோதிக்கப்படும். இப்பரிசோதனையில்தான் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் தன்மை குறித்து சோதிக்கப்படும்.

Phase 3 எனும் மூன்றாம் கட்ட சோதனை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்கள் மீது சோதிக்கப்படும். தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த சோதனையின் போதுதான் உறுதி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *