பரிசல் சிவ.செந்தில்நாதன். 25 வருடங்களுக்கு மேலாகப் பதிப்புத்துறையில் இயங்கிவருபவர். மருந்து விற்பனை கடையில் ஊழியராக வாழ்வை துவங்கி, மிதிவண்டியில் புத்தக விற்பனை, பதிப்பாளர், வெளியிட்டாளர், சிற்றிதழ் ஆசிரியர், புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர், சமுக செய்ற்ப்பாட்டாளர் என்று தொடர்ந்து இயங்குபவர். இவர் நடத்தும் காலாண்டு இதழான ‘இடைவெளி’ இதழுக்காக சிறந்த சிற்றிதழுக்கான சுஜாதா விருது வாங்கியவர்.
இவரது பரிசல் பதிப்பகத்தின் வெளியீடான வீரபாண்டியன் எழுதிய ‘பருக்கை’ நாவலுக்கு சாகித்திய அக்காடமியின் யுவ புரஸ்கர்’ விருதும், ப.இளமாறன் இலக்கணம் பற்றிய எழுதிய நூலுக்கும், வெ.பிரகாஷ் எழுதிய ‘திணை உணர்வும் பொருளும்’ என்கிற ஆய்வு நூல்களுக்கும் மத்திய அரசு செம்மொழி விருது வழங்கியது.
இன்று, நீண்ட வாசிப்பு அனுபவம் கொண்ட திரு. பரிசல் செந்தில் நாதன் அவர்களின் ஐந்து பரிந்துரைகள்.
’பாசிசம்’- என் என் ராய்.
’நீலகண்ட பறவை தேடி’
’புயலிலே ஒரு தோணி’
’இடைவெளி’- நாவல்
’உ வே சா- என் சரித்திரம்’
பாசிசம் என் என் ராய்.
பாசிசம் ஆட்சியில் ஏறிய அரசியல் நிகழ்வை எம். என். ராய் அவர்கள் மிக சிறப்பாக இந்நூலில் விவரித்துள்ளார். இந்துத்துவ வகுப்புவாதத்தின் இன்றைய அரசியல் செயல்பாடுகளோடு இதனை ஒப்பிட்டுபார்த்தால் பல ஒற்றுமைகள் வெளிப்படும் மனித குலத்திற்கு எதிரான அனைத்து கருத்தியல் சிந்தனைகளும் பாசிச கருதியலுக்கு அடிப்படியாக இருந்ததை எம். என்.ராய் தெளிவாக முன்னெடுத்து வைத்துள்ளார்.
தமிழில் 1999 ஆம் ஆண்டு வெ.கோவிந்த சாமியின் மொழி பெயர்ப்பில் வெளிவந்த இந்த புத்தகம் மீண்டும் பரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.
நீலகண்ட பறவை தேடி,
அதீதன் பந்த்யோபாத்யாய எழுதி தமிழில் சு,கிருஸ்ண மூர்த்தி வெளியிட்டில் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நாவல்.
புயலிலே ஒரு தோணி
தமிழின் முதல் புலம் பெயர் இலக்கியம் எழுதியவர் ப.சிங்காரம். இரண்டாம் உலகப் போரில் தமிழர்களின் பங்கையும், பகையையும், அவர்களது புலம்பெயர் வாழ்க்கையையும், காதலையும், தொழிலையும் மையப்படுத்தி எழுதபட்ட புனைவு.
இடைவெளி நாவல்
சம்பத்தின் இடைவெளி நாவல் உமாபதி நடத்திய தெறிகள் என்ற காலண்டிதழில் வெளியானது. மிக சிறிய நாவல் 110 பக்கங்கள் கொண்டது. 1984ம் ஆண்டு இதை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. 2018 ஆம் ஆண்டு மீண்டும் பரிசல் வெளியிடாக வந்துள்ளது.
உ வே சா என் சரித்திரம்.
டாக்டர் உ.வே.சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பதியப்பட்டுள்ளன. இது ஆனந்த விகடன் இதழில் 6-1-1940 ஆம் நாள் முதல் தொடர்ந்து 28-4-1942ஆம் நாள் அவர் காலமாகும் வரை வெளிவந்தது. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன. தமிழின் பல்வேறு பதிப்பங்களில் இருந்து வெளிவந்துள்ளது.