வட இந்திய ஊடகங்கள் சுஷாந்த் சிங்

வடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%

அதிகாரத்தை நோக்கி நேர்மையான கேள்விகளை எழுப்புவதே ஊடக அறமாகும். அதன் காரணமாகத்தான் ஜனநாயத்தின் மிக முக்கியமான தூணாக ஊடகங்கள் கருதப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவினை சந்தித்து வேலை இழப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அதைப் பற்றிய விவாதங்களை தவிர்த்துவிட்டு, நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை மையப்படுத்தியே வட இந்திய ஊடகங்கள் அனைத்தும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம் என்ன என்று அதிகாரத்தினை நோக்கி கேள்வி எழுப்பாமல், ஒரு நடிகரின் மரணத்தையே ஒட்டுமொத்த நாடும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் அவை செயல்படுகின்றன.

சுஷாந்த் சிங் மரணத்தை மையப்படுத்தியே வளர்க்கப்பட்ட ஊடக விவாதங்கள்

இரண்டு மாதத்திற்கு முன், இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என்று செய்திகள் ஒளிபரப்பாகத் துவங்கியது. அதன்பின்னர் இந்தியாவில் மன ஆரோக்கியத்திற்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என்று சில நாட்கள் ஊடகங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தது. ஆனால் மன ஆரோக்கியம் குறித்த விவாவதங்கள் ஊடக நிறுவனங்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த TRP-யை அளிக்கவில்லை. 

எனவே சுஷாந்த் சிங்கின் மரணத்தின் பின்னால் பல சதிகள் இருப்பதாக அடுத்தடுத்து ஊடகங்களில் பரபரப்பான விவாதங்களை எழுப்பத் தொடங்கினர். சுஷாந்த் சிங்கின் பெண் தேழியான ரியா சக்கரவர்த்திக்கு இந்த மரணத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி விவாதத்தினை வடஇந்திய ஊடகங்கள் தீவிரப்படுத்தின.

சுஷாந்த் சிங் இறப்பு குறித்து அவரின் பெற்றோர்கள் ரியா சக்கரவர்த்தியின் மீது புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையினை ஜுலை 25-ம் தேதி பதிந்தனர். அதற்கு பின்னர் செப்டம்பர் 8-ம் தேதி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். ஜூலை 25-க்கும், செப்டம்பர் 8-க்கும் இடைப்பட்ட 44 நாட்களில் வட இந்தியாவின் மிக முக்கியமான 24 மணிநேர செய்தி செய்தி உடகங்கள் அனைத்தும் 70% இந்த செய்தியை ஒளிபரப்புவதிலேயே கவனம் செலுத்தியுள்ளன. 

தவிர்க்கப்பட்ட முக்கிய விவாதங்கள்

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ரியா சக்கரவர்த்தி போதை பழக்கத்திற்கு அடிமையானவர், கண்கட்டி வித்தை செய்யக்கூடியவர், சுஷாந்த் சிங்கை போதைப் பொருட்கள் பயன்படுத்தத் தூண்டிவிட்டார், பண ஆதாயத்திற்காக அவருடன் பழகினார் என்று பல்வேறு பரபரப்பான செய்திகள் தொடர்ந்து ஊடகங்களால் வெளியிடப்பட்டன. பல வாரங்களுக்கு இந்த ஒரு செய்தியைத் வேறெந்த முக்கியச் செய்தியும் வட இந்திய ஊடகங்களில் வெளியாகவில்லை. இந்த காலக்கட்டத்தில்தான் நாட்டின் பொருளாதாரம் மீள முடியாத சரிவில் சென்று கொண்டிருந்தது. கோரோனா தொற்றினால் நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்தனர். இந்தியா சீனா இடையில் யுத்த முரண்பாடுகள் வெடித்தது. 

எந்தெந்த ஊடகங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டன?

News Laundry எனும் செய்தி நிறுவனம் மே 1, 2020 முதல் செப்டம்பர் 10, 2020 வரை வட இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் Youtube பக்கங்களில் Chakraborty மற்றும் Sushant Singh Rajput ஆகியோரின் பெயர்களில் வெளியான அனைத்து செய்திகளையும் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த வீடியோக்களின் நேரத்தைக் கணக்கிட்டு, அதனை அந்த Youtube சேனலில் இந்த காலக்கட்டத்தில் பதிவேற்றப்பட்ட அனைத்து வீடியோக்களின் மொத்த நேரத்துடன் ஒப்பிட்டு இந்த முடிவினை வெளியிட்டுள்ளது.

C:\Users\Admin\Desktop\newslaundry_2020-09_7daae07e-1213-4afa-92dc-ee2f0d5ec8cb_SSR_coverage.jpg
வட இந்திய முக்கிய ஊடகங்கள் சுசாந்த் சிங் மற்றும் ரியா சக்ரவர்த்தி குறித்த செய்திக்கு செலவிட்ட நேரம்

Republic TVTimes Now, and Aaj Tak போன்ற செய்தி ஊடகங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 50-70 % நேரத்தை சுஷாந்த் சிங் இறப்பு மற்றும் ரியா சக்கரவர்த்தி கைது தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது. ABP News 40-50% நேரத்தையும், Zee News 20-50% வரையும் இந்த செய்திக்காக தனது நேரத்தை ஒதுக்கியது.

GDP மற்றும் பொருளாதார செய்திகளுக்கு செலவிட்ட நேரம்

ஆனால் இதே காலக்கட்டத்தில் இந்த செய்தி ஊடகங்கள் இந்திய பொருளாதாரம், வேலைவாய்பு மற்றும் GDP குறித்தான செய்திகளை ஒளிபரப்ப மிகக் குறைவான நேரத்தையே ஒதுக்கியுள்ளன. ஏப்ரல் மற்றும் ஜுன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரம் 24% சுருங்கி விட்டதாக செப்டம்பர் 2-ம் தேதி தகவல்கள் வெளியானது. இந்த நெருக்கடியான நிலையை மக்களுக்கு எடுத்துரைக்காமல் தொடர்ந்து சுஷாந்த் சிங் மரணம் குறித்து மட்டுமே செய்திகள் Prime time செய்திகளாக வெளியிடப்பட்டு வந்தன. 

Republic TVTimes NowAaj Tak, Zee News, ABP News போன்ற ஊடகங்கள் 2% சதவீதத்திற்கும் குறைவான நேரத்தையே GDP சரிவு குறித்தான செய்திகளுக்கு ஒதுக்கியுள்ளன. NDTV மட்டும்  12% நேரத்தை GDP குறித்த செய்திகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதுதான் வட இந்திய ஊடகங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கக் கூடிய பொருளாதார சிக்கலுக்கு கொடுத்துள்ளா முக்கியத்துவம் ஆகும். கீழே உள்ள வரைபடத்தில் ஒவ்வொரு ஊடகமும் GDP குறித்த செய்திகளுக்கு ஒதுக்கியுள்ள நேரத்தின் அளவைப் பார்க்கலாம்.

C:\Users\Admin\Desktop\newslaundry_2020-09_618731c4-573b-46f1-9dcd-21fd2b1220a3_economy_coverage (1).jpg
வட இந்திய முக்கிய ஊடகங்கள் GDP, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளுக்கு செலவிட்ட நேரம்

கொரானா மரணங்கள், பொதுசுகாதாரத்தின் பலவீனங்கள், தொழிலாளர்கள் இடம்பெயர்வு, பொருளாதார சரிவு, வேலைவாய்பு இழப்பு, வறுமை போன்ற நெருக்கடியான சூழ்நிலையை அரசுக்கு உணர்த்தும் விதமாக செய்திகளை வெளியிடாமல், இந்த நெருக்கடியை மடைமாற்றும் விதமாக, பொருந்தா செய்திகளை பூதாகரமாக்கி மக்களின் கவனத்தை சிதறடிக்கப்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஊடகங்களின் இந்த தன்மையானது ஊடக நேர்மையின் மீதான நம்பிக்கையை மக்களை இழக்கச் செய்துவிடும் என்பதை வட இந்திய ஊடக நிறுவனங்கள் உணர்ந்தாக வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *