விஜய் சேதுபதி முரளிதரன்

முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் ஏன் எதிர்க்கப்படுகிறது? #ShameOnVijaySethupathi ட்ரெண்டிங்

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் போது இப்படம் அறிவிக்கப்பட்ட போதே பல எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் எதிர்ப்புகளை மீறி தற்போது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் விஜய் சேதுபதிக்கு எதிரான கோபத்தினை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். 

முரளிதரன் வாழ்க்கைப் படம் ஏன் எதிர்க்கப்படுகிறது?

  • முத்தையா முரளிதரன் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை தொடர்ச்சியாக மறுத்து வரும் நபராக இருக்கிறார். 
  • இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கைக்கு சென்று மனித உரிமை சூழலை பார்வையிட்ட போது, அவரின் காரின் முன்னே சூழ்ந்து கொண்டு தங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தமிழ் தாய்மார்கள் கண்ணீர்விட்டு கதறினார். பின்னாளில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முரளிதரன் தாய்மார்களின் அழுததை சுட்டிக்காட்டி இங்கிலாந்து பிரதமரை ஏமாற்றி விட்டார்கள் என்று பேசினார்.
  • சமீபத்தில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முத்தையா முரளிதரனின் சொந்த சகோதரர் ராஜபக்சேவின் கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.
  • அத்தேர்தலின்போது ராஜபக்சேவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதுடன், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் தீவிர பிரச்சாரகராக தொடர்ந்து இருந்து வருகிறார் முரளிதரன்.
  • இலங்கையை ஆள்வதற்கு ராஜபக்சேதான் சிறந்த தலைவர் என்று புகழாரம் செய்தார். மேலும் ராஜபக்சேவை நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டு பேசினார்.
  • தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 2009-ம் ஆண்டைக் குறிப்பிட்டு, அந்த வருடம் தான் தன் வாழ்வின் மகிழ்ச்சியான வருடம் என்று குறிப்பிட்டு வருகிறார்.
  • இலங்கையின் விவகாரத்தில் தமிழ்நாட்டின் தலைவர்கள் தலையிடுவதற்கு உரிமையில்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
  • ராஜபக்சே அரசின் சார்பாக முரளிதரனுக்கு தமிழர்கள் பகுதியாக இருக்கக் கூடிய வடக்கு மாகாண ஆளுநர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அது சில காரணங்களால் கைவிடப்பட்டது.

 #ShameOnYouVijaySethupathi

இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தொடர்ச்சியாக ட்விட்டரில் விஜய் சேதுபதிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ட்வீட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்தை நெருங்கியிருக்கிறது.

விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து கைவிட்டு விலக வேண்டும், இல்லையேல் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதே அந்த ஹேஷ்டேக்கில் பதிவிடும் பெரும்பாலோனோரின் கருத்தாக இருக்கிறது. அந்த ட்வீட்களில் சிலவற்றை இங்கு அளித்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *