கேரளா விருதுகள்

மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் விருதுகள்; பார்க்க வேண்டிய திரைப்படங்கள்

கடந்த வாரம் மலையாள திரைப்படங்களுக்கான கேரள அரசின் 50-வது விருதுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இயல்பான கலை வடிவத்திலான திரைப்படங்கள் மலையாளத் திரைப்படங்களின் சிறப்பு என்பதால் தமிழ்நாட்டிலும் மலையாள திரைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த விருதுகளின் பட்டியலில் ஒவ்வொரு பிரிவினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படமும் ஒவ்வொரு தனிச்சிறப்பினைக் கொண்டிருக்கிறது. பட்டியலை பார்த்து, பார்க்காத திரைப்படங்களை பார்த்து விடுங்கள். 

சிறந்த திரைப்படம்: வசந்தி (Vasanthi)

சிறந்த திரைப்படம் இரண்டாவது இடம்: கெஞ்சிரா (Kenchira)

சிறந்த நடிகர்: சூரஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்ட் குஞ்சப்பட்டன் Ver 5.25 (Android Kunjappan Ver 5.25) மற்றும் விக்ருதி (Vikruthi) திரைப்படங்களுக்காக)

சிறந்த நடிகை: கனி குஸ்ருதி, பிரியாணி (Biriyani) திரைப்படத்திற்காக.

சிறந்த இயக்குநர்: லிஜோ ஜோஸ், ஜல்லிக்கட்டு (Jallikattu) திரைப்படத்திற்காக.

சிறந்த குணச்சித்திர நடிகர்: ஃபகத் பாசில், கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights) திரைப்படத்திற்காக.

சிறந்த குணச்சித்திர நடிகை: ஸ்வசிகா, வசந்தி (Vasanthi) திரைப்படத்திற்காக.

பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பீடு கொண்ட சிறந்த படம்: கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)

சிறந்த குழந்தைகளுக்கான படம்:  நானி (Nani)

சிறந்த திரைக்கதை (Original): ரஹ்மான் பிரதர்ஸ், வசந்தி (Vasanthi) திரைப்படத்திற்காக.

சிறந்த திரைக்கதை (Adapted): பி.எஸ்.ரஃபீக், தோட்டப்பன் (Thottappan) திரைப்படத்திற்காக.

சிறந்த புதுமுக இயக்குநர்: ரதீஷ் பாலகிருஷ்ணன், ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் Ver 5.25 (Android Kunjappan Ver 5.25) திரைப்படத்திற்காக.

சிறந்த இசையமைப்பாளர்: சுஷின் ஷ்யாம், கும்பலாங்கி நைட்ஸ் (Kumbalangi Nights) திரைப்படத்திற்காக. 

சிறந்த பின்னணி இசை: அஜ்மல் ஹஸ்புல்லா, விரிதகிரிதியுள்ள சதுரா (Vrithakrithiyulla Chathura) திரைப்படத்திற்காக

சிறந்த படத்தொகுப்பாளர்: கிரண் தாஸ், இஷ்க் (Ishq) திரைப்படத்திற்காக.

சிறந்த ஒளிப்பதிவாளர்: பிரதாப் வி.நாயர், கெஞ்சிரா (Kenchira) திரைப்படத்திற்காக.

சிறந்த கலை இயக்குநர்: ஜோதிஷ் சங்கர், கும்பலாங்கி நைட்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் Ver 5.25 திரைப்படங்களுக்காக. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *