விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின் 10 பிரபலங்கள் பிரபாகரன் குறித்து பேசியவைகளின் தொகுப்பு.
நடிகர் ராஜ்கிரண்
எனக்குப் பிடித்த தலைவர் தமிழீழ தலைவர் பிரபாகரன். அவர் ஒருவர் தான் மக்களாட்சி என்றால் என்ன, மக்கள் என்றால் என்ன, தலைவர் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தார்.
இயக்குநர் மகேந்திரன்
பிரபாகரன் அவர்களை சந்தித்த போது, அவர் என்னிடம் தமிழ் சினிமா குறித்து மிகவும் அக்கறைப்பட்டு பேசினார். பின்னர் அப்படியே பேச்சை ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்… யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார்.
படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹொலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் கிளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.
அங்கிருந்து கிளம்பிய பின்னர், என்னிடம் மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.
“அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்றும் தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”
இயக்குநர் பாரதிராஜா
பேச்சில் மாத்திரம் பலர் சாதித்து வரும் நிலையில், எந்தவித பின்னணியும் இன்றி நான்கு பேரை நானூறாக்கி அவர்களை நான்காயிரமாக்கி மிக பிரம்மாண்டமான ஒரு போராளியாக நின்றது பிரபாகரன் மட்டுமே.
அகநானூறு, புறநானுறு போன்ற இலக்கியங்களில் மாத்திரமே பிரபாகரனைப் போன்ற வீரனைப் பார்க்க முடியும் என்று குறிப்பிட்ட பாரதிராஜா, இந்த நூற்றாண்டில் இலக்கியங்களில் வந்த புரட்சி வீரர்களைப் போன்று செயற்பட்ட ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் மட்டுமே என்று கூறியிருந்தார்.
கவிஞர் வைரமுத்து
90 வயது வாழ்ந்து முடித்த தமிழ்ப் புலத்தின் அறிஞர் ஒருவர் தன் மரணத்தின் முன் நிமிடங்களில் இப்படிச் சொல்லிப் போனார். இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலை பெறுவார்கள். ஒருவர் பிரபாகரன். இன்னொருவர் பெரியார் என்று கூறினார்.
நடிகர் சத்யராஜ்
ஒன்று பயத்தை விடு, இல்லை லட்சியத்தை விடு என்ற தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை.”
தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு… இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா பிரபாகரனை ‘ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார்
முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த இயக்குநர் ராம்குமார், பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவு.
நடிகர் சிபிராஜ்
நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழின தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், வீரத்தமிழின தலைமகனின் 66-வது பிறந்த நாள் இன்று என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி கீழ்காணும் பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.