தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்களால் விவாதிக்கப்படாத செய்திகளையும், அவை குறித்த ஆய்வுகளையும் அளிக்கும் இணையதளம். செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் உட்பொருளை ஆய்ந்து, விசாலப் பார்வையை மக்களுக்கு வழங்குவதே எங்கள் பணி.

இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் குறித்து பல்வேறு புரிதல்கள் தமிழ் சூழலில் உள்ளது. இதனை பல்வேறு செய்தி தளங்கள் பல்வேறு மட்டங்களில் வெளிப்படுத்துகின்றன. வெகுசன தளத்திற்கும், அறிவுசார் தளத்திற்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு உண்மையை சொல்வதே இத்தளத்தின் நோக்கம்.

இத்தளம் சம்பவங்களை செய்திகளாக்கும் தளமாக மட்டும் செயல்படாமல், ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் உள்ள அரசியலை வெளிப்படுத்தும் கருவியாக செயல்படும்.